பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர் வார்னர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர் மற்றும் ரென்ஷா இருவரும் களமிறங்கினர். தொடக்க முதலே அடித்து ஆடினர்.  முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து வார்னர் அசத்தினார்.


சர்வதேச அரங்கில் இந்த சாதனை படைத்த ஐந்தாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டான் பிராட்மேனுக்கு பின், இந்த சாதனை படைத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.