இதுலாம் நமக்கு தேவையா? ரன் அவுட்க்கு ஆசைபட்டு பல்பு வாங்கிய சிராஜ்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை 1-1 என சமன் செய்தது. ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டியில், முகமது சிராஜ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும், சிராஜ் ஒரு ரன்-அவுட் முயற்சியில் ஈடுபட, அது தென்னாப்பிரிக்காவிற்கு நான்கு ரன்களை பெற்று கொடுத்தது. 48வது ஓவரில் கேசவ் மகாராஜிற்கு சிராஜ் பந்து வீசினார். சஞ்சு சாம்சனிடம் சென்ற பந்தை மீண்டும் பெற்ற சிராஜ், நான்-ஸ்ட்ரைக்கர் டேவிட் மில்லர் தனது கிரீஸுக்கு வெளியே நிற்பதைக் கண்டார். மில்லரை ரன் அவுட் செய்வதற்காக அவர் ஸ்டம்பில் வேகமாக வீச முயன்றார், ஆனால் அவர் தவறி பந்து பவுண்டரியை நோக்கி சென்றது.
மேலும் படிக்க | கோடிக்கணக்கில் ஐபிஎல் சம்பளம்! ஆனாலும் உலக கோப்பையில் இடம் இல்லை!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற சிராஜின் பந்துவீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரீசா ஹென்ட்ரிக்ஸை வெளியேற்றுவதன் மூலம் தென்னாப்பிரிக்காவிற்கான ஆபத்தான கூட்டாண்மையை முறியடிக்க மிடில் ஆர்டரில் திரும்பி வந்தார், பின்னர் தனது கடைசிப் பந்துகளில் முறையே ஆறு மற்றும் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து டெத் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தென்னாப்பிரிக்காவை 278/7 என்று கட்டுப்படுத்துவதில் அவரது 3/38 புள்ளிகள் முக்கியமானவை.
பேட்டிங்கில் ஷிகர் தவான் மற்றும் ஷுப்மான் கில் ஏமாற்றினாலும், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இணைந்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். கிஷன் சிறப்பாக விளையாடி 93 ரன்கள் எடுத்தார், ஐயர் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார், இதனால் இந்தியா 45.5 ஓவர்களில் வெற்றியைப் பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. டில்லியில் செவ்வாய்கிழமை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
மேலும் படிக்க | பீல்டரை கேட்ச் பிடிக்க விடாமல் தடுத்த மேத்யூ வேட்! வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ