மவுண்ட் மவுங்கானுய்: நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. பென் ஸ்டோக்ஸ் 91(146), ஜோ டென்லி 74(181) ரன்கள் உதவியுடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 127 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன்பிறகு அந்த அணியின் விக்கெட் கீப்பர் பி.ஜே. வாட்லிங் 205 ரன்களும், மிட்சல் சான்ட்னர் 126 ரன்களும் அடித்ததால், நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 615 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் பிறகு 262 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 2 வது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது.


 



நேற்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மிட்சல் சான்ட்னர் பிடித்த கேட்ச் உள்ளது. இங்கிலாந்து வீரர் ஓலி போப் 6 ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடிக்க டிரைவ் செய்த போது, கவர் பாயிண்ட்டில் நின்றிருந்த மிட்சல் சான்ட்னர் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதுகுறித்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


மிட்சல் சான்ட்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.