நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்த போது, அம்பையர் கொடுத்த தவறான தீர்ப்பை எதிர்த்து பேசினால், அபராதம் விதிக்கக்கூடும், நான் அபராதம் கட்ட விரும்பவில்லை, அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட்டேன்  என்று மகேந்திர சிங் தோனி கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவை சேர்ந்த கிரிகோரி ப்ராத்வாட் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த அனிசூர் ரஹ்மான் ஆகியோர் நடுவராக செயல்பட்டனர். அப்பொழுது எம்.எஸ் தோனி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது ஆப்கானிஸ்தான் வீரர் ஜாவேத் அஹ்மடி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால் தோனியை பொறுத்த வரை, அந்த பந்து மேல் நோக்கி சென்றது எனக் கூறினார். அதேபோல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு கொடுக்கப்பட்ட எல்பிடபிள்யூ பந்து லெக் ஸ்டம்ப்பி இருந்து மிகவும் விலகி இருந்தது. ஆனால் இதுக்குறித்து பேசினால், அபராதம் விதிக்கப்படும் என்பதால், அமைதியாக இருந்தேன் என்று கூறினார். 


 



இதுக்குறித்து தோனி கூறிகையில், எங்கள் அணியில் ரன்-அவுட் மற்றும் நடுவரின் இரண்டு தவறான தீர்ப்பு போட்டி டிராவில் முடிந்தது. நடுவரின் தவறான தீர்ப்பை குறித்து பேச முடியாது. ரிப்ளேவில் நன்றாக தெரிந்தது. ஆனால் தீர்ப்பை குறித்து பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், எதுவும் கூறவில்லை. ஆப்கானிஸ்தான் நன்றாக விளையாடியது. நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்களின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் நன்றாக இருந்தது என்றும் கூறினார்.