தாய் தனது குழந்தைக்கு மிருகத்தனமாக பாடம் சொல்லிக் கொடுப்பதும் அதற்கு அந்த குழந்தை பயந்து கதறும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கண்டனம் தெரவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த விடியோவில் ஒரு பெண் குழந்தைக்கு அவரது தாய் கணக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் போது மிக கொடூரமாக நடந்து கொள்கிறார்.


தாயின் மிரட்டலுக்குப் பயந்து அந்த குழந்தை கெஞ்சி அழுகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது. 


விராட் கோலி இந்த வீடியோ இன்ஸ்ட்டாகிராமில் பகிரந்து, அதில், குழந்தையின் வலியும் கோபமும் புறக்கணிக்கப்பட்டு, பாடம் கற்பிக்கும் போது தாயின் இரக்கம் முற்றிலுமாக ஜன்னல் வழியாக வெளியேறிவிடுவதாக கூறியுள்ளார்.