துரேந்தோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், பெங்களூரு எஃப்சி அணியின் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியின் பட்டத்தை வென்றது. இதற்கு முன், பெங்களூரு எஃப்சி அணி, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் ஐ-லீக் தொடர்கள், 2015, 2017ஆம் ஆண்டுகளில் பெடரேஷன் கோப்பை தொடர்கள், 2018ஆம் ஆண்டு சூப்பர் கோப்பை தொடர், 2019இல் இந்தியன் சூப்பர் லீக் ஆகியவற்றை வென்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தா நகரில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு பிறகு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில், மேற்கு வங்க கவர்னர் இல.கணேசன் பங்கேற்று கோப்பைகளை வழங்கினார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 


மேலும் படிக்க | T20 World Cup: எதிரணியை கலங்கடிக்க ரோகித் சர்மாவின் ஸ்பெஷல் பிளான்


கோப்பை வழங்கும் நிகழ்வின்போது, வெற்றிபெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கவர்னர் இல.கணேசனை மறைப்பது போன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது, போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் விதமாக, சுனில் சேத்ரியை தனது கைவைத்து தள்ளினார். இதன் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இல.கணேசனின் செயலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், இந்திய அணிக்கு அதிக கோல்களை அடித்தவருமான சுனில் சேத்ரி பெரும் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் நிலையில், கவர்னரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்கும், கேலிக்கும் உள்ளாகியுள்ளது.  இந்த வீடியோவை @shafipvulm என்ற ட்விட்டர் பயனர் பதிவிட்டு,"வெட்கக்கேடான செயல். வீரரை மதியுங்கள். அவர் வெறும் வீரர் மட்டும் இல்லை. அவர் கேப்டன், தலைவர், ஜாம்பவான்" என குறிப்பிட்டுள்ளார்.



இதுகுறித்து, அன்ஷுல் சக்சேனா என்ற ஊடகவியலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"துரந்தோ கோப்பை 2022 தொடரை வென்ற, மேற்கு வங்க கவர்னர் இல.கணேசனுக்கு வாழ்த்துகள்" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மற்றொருவர், 2006ஆம் ஆண்டில், ரிக்கி பாண்டிங், சரத் பவாருக்கு செய்த செயலை நினைவுக்கூர்ந்தனர்.



2006 ஐசசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மும்பையில் நடந்தது. அதில், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. இதேபோன்ற கோப்பை வழங்க, அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவார் மேடையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென ரிக்கி பாண்டிங் மேடை ஏறி, கோப்பை வழுக்கட்டாயமாக வாங்கி, அணியினர் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று சரத் பவாரை மேடையில் இருந்து கீழே இறக்கிவிடுவார். இதை குறிப்பிட்ட ஒரு ட்விட்டர் பயன், இல.கணேசனுக்கும் ரிக்கி பாண்டிங் வைத்தியம்தான் சரி என பதிவிட்டிருந்தது அதிக கவனத்தை பெற்றது. 



தற்போது, மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் கவர்னராக இருந்து வரும் இல.கணேசன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | பார்ப்பதற்கே பல கோடி கண்கள் வேண்டும் - மாஸ்டர் பிளாஸ்டரின் மாஸான ஷாட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ