ஆசிய கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய அணியின் தற்போதயை இலக்காக இருக்கிறது. அதற்காக இந்திய அணி வைத்திருக்கும் ஸ்பெஷல் பிளானை ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மாவின் பிளான்
20 ஓவர் உலகக்கோப்பை குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, "இந்த தொடருக்கு இந்திய அணி பெரிய அளவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய எண்ணம் எல்லாம், ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பது தான். 50 ரன்கள் வரை விக்கெட் விழாமல் விளையாடிவிட்டால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களும் அதே ஆட்டத்தை தொடர்வார்கள். ஒருவேளை விக்கெட் விழுந்துவிட்டால், பின்வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.
ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமான பேட்டிங்
ஆசிய கோப்பையில் எங்களது பேட்டிங் பாணியை பார்த்தால், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் 170 ரன்கள் எடுத்துள்ளோம். அதாவது, இலங்கைக்கு எதிரான அந்த ஒரு போட்டியை தவிர கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். பாகிஸ்தானுக்கு எதிரான எங்கள் ஆட்டத்தையும் நீங்கள் பார்த்தீர்கள். கடைசி ஓவர் வரை சென்றது. அதனால் அந்த போட்டியில் கிடைத்த முடிவு பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
அதிர்ஷ்டமும் தேவை
உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில், சில அதிர்ஷ்டங்களும் அணிக்கு தேவை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் மறுஆய்வு கூட்டம் இருக்கும். அதில் குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து மட்டும் மறு ஆய்வு செய்ய இருக்கிறோம். அதேபோல் வீரர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | 'இந்த நாள் வரவே கூடாது என்று விரும்பினேன்' - பெடரருக்கு நடாலின் பிரியாவிடை ட்வீட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ