16:07 14-10-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது மேற்கிந்தியா!



இந்தியாவை விட 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியா அணி...



15:54 14-10-2018


சுனில் அம்பிரஸ் 38(95), ஜாசன் ஹோல்டர் 19(30) ரன்களில் வெளியேறினர்!



தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்துள்ளது. தேவேந்திர பிஷூ 9(25) மற்றும் ஜோமல் வாரிக்கன் 7(15) ரன்களுடன் களத்தில் உள்ளனர். 


உமேஷ் யாதவ், ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட், அஷ்வின் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் குவித்துள்ளனர். இந்தியாவை விட 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியா!



\14:21 14-10-2018


ரோட்ஷன் சேஷ் 6(22) மற்றும் ஹேன் டௌர்விச் 0(1) ரன்களில் வெளியேறினர்!




தற்போதையா நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 27 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்துள்ளது. சுனில் அம்பிரஸ் 20(54), ஜாசன் ஹோல்டர் 4(3) ரன்களுடன் களத்தில் உள்ளனர். 


உமேஷ் யாதவ் 3 விக்கெட், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்!



13:41 14-10-2018


இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களிடம் தத்தளித்து வருகின்றனர்!




ஷாய் ஹோப் 28(42) மற்றும் ஹெட்மையர் 17(29) ரன்களில் வெளியேறினர்.


தற்போதையா நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் குவித்துள்ளது. சுனில் அம்பிரஸ் 5(18), ரோட்ஷன் சேஷ் 3(8) ரன்களுடன் களத்தில் உள்ளனர். அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்!



12:58 14-10-2018


இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது!



ப்ரத்வொயிட் 0(2) மற்றும் கிரண் பவுள் 0(9) ரன்களில் வெளியேறினர்.


தற்போதையா நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் குவித்துள்ளது. ஷாய் ஹோப் 16(22) ஹெட்மையர் 6(15) ரன்களுடன் களத்தில் உள்ளனர். அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்!



இந்தியா மற்றம் மேற்கிந்திய தீவுகள் அணி மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது!


இந்தியா மற்றும் மேற்கிந்தியா தீவுகள் அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் கடந்த அக்டோபர் 12-ஆம் நாள் துவங்கி ஐதராபாத் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.


மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறி வந்த நிலையில் ஆட்டத்தின் 101.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஷ் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 106(189) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். அதேப்போல் ஜாசன் ஹோல்டர் 52(92) ரன்கள் குவித்து வெளியேறினார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட், குல்தீப் யாதவ் 3 விக்கெட், அஷ்வின் 1 விக்கெட் குவித்தனர்.


இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் KL ராகுல் 4(25) ரன்களில் வெளியேற பிரித்வி ஷா 70(53) ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து வந்த கோலி 45(78), ரஹானே 80(183), ரிஷாப் பன்ட் 92(134) என ரன்களை குவித்து அணியின் எண்ணிக்கையினை கனிசமாக உயர்த்தினர். 



இறுதிவரை நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த இந்தியா அணி 106.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் குவித்தது. அதன்படி இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது!