IND vs WI 2nd ODI: இந்தியாவுக்கு சவால் கொடுக்க மேற்கிந்திய தீவுகள் தயார்
இன்று இரவு 7 மணிக்கு மேற்கிந்திய அணி மற்றும் இந்திய அணி மோதும் இரண்டாவது ஆட்டம் நடைபெற உள்ளது.
டிரினிடாட்: இன்று இரவு 7 மணிக்கு மேற்கிந்திய அணி மற்றும் இந்திய அணி மோதும் இரண்டாவது ஆட்டம் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை முதலில் யார் பதிவு செய்வது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்கிந்தியா சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி இரு அணிகளுக்கும் இடையே ஆரம்பமானது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்க தயாரானது வெஸ்ட்இண்டீஸ் அணி. ஆனால் போட்டி துவக்கிற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கிந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் இவின் லீவிஸ் 40 ரன்களுடனும், ஷாய் ஹோப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று மேற்கிந்திய அணி மற்றும் இந்திய அணி மோதும் இரண்டாவது ஆட்டம் டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.