உலகக்கோப்பை 2019: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு
இன்றைய இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன.
17:52 22-06-2019
நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.
மான்செஸ்டர்: மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன.
2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இதுவரை 27 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
முதலில் நடைபெற உள்ள 28_வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டாவது போட்டி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும். அந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன.
நியூசிலாந்து அணி இதுவரை ஆடிய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத அணியாக உள்ளது. விளையாடிய ஐந்து ஆட்டங்களில் நான்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால், மொத்தம் 9 புள்ளிகளுடன் அட்டவணையில் 2வது இடத்தில் உள்ளது. அதுவும் இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும்.
அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து அதிக ரன்-ரேட்டில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் லீக் சுற்றுடன் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்.
உலகக்கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் மொத்தம் 7 போட்டிளில் மோதியுள்ளது. அதில் நியூசிலாந்து 4 போட்டிகளில் வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
இன்றைய போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் நெட்வொர்க் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வைட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், கெமர் ரோச், ஷானன் கேப்ரியல்
நியூசிலாந்து: கொலின் முன்ரோ, மார்ட்டின் குப்தில், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லாதம், ஜிம்மி நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்டர், லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி / டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட்