இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆஸ்திரேலியாவிம் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது.  கான்பெர்ரா மனுகா ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – ஆந்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய (Australia) அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருப்பதால், டி-20 தொடரை இந்தியா கைப்பற்றியது..  



இதே, ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக, இன்றையப் போட்டியை மிகவும் ஜாக்கிரதையாக கையாளும். தன்னுடைய மண்ணில் நடைபெறும் தொடரை விட்டுக் கொடுப்பதை ஆஸ்திரேலிய அணியால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே, இன்றைய போட்டியில் பலபரிட்சை பலமாகவே இருந்தது. 42 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Also Read | AUS vs IND: தமிழக வீரர் நடராஜனின் அருமையான ஆட்டம்


தமிழக வீரர் நடராஜனின் (Natarajan) பங்கு சென்ற போட்டியில் இருந்ததைப் போலவே இந்த டி-20 போட்டியில் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதேபோல, விராட் கோலி (Virat Kohli) தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் போட்டித்தொடர் கைநழுவிப் போன நிலையில், இந்த டி-20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதில் அவரும் தீவிரமாக இருந்தார். 


டி-20 தொடரை அடுத்து நடைபெறும் டெஸ்ட் போட்டித் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி (Virat Kohli) கலந்துக் கொள்ள போவதில்லை என்ற நிலையில் அவருக்கு தன்னை கேப்டனாக நிலைநிறுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.


Also Read | IND vs AUS T20: இரண்டு அணிகளுக்கும் ஏற்பட்ட பெரிய பின்னடைவு!!  நடந்தது என்ன?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR