இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கு பாகிஸ்தான் தகுதி பெற வேண்டுமெனில் ஒரு மிகப்பெரிய தியாகத்தை வங்கதேச அணி செய்ய வேண்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் அரையிறுதிக்கு செல்லும் அணிகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது இருப்பினை உறுதி செய்துவிட்டன. நான்கவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.


9 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் பெற்றுள்ள நியூசிலாந்து அணி 4-ஆம் இடத்தில் உள்ளது. அதேவேளையில் 8 போட்டிகள் விளையாடி 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டியில் வங்கதேச அணியிடன் நாளை பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் 11 புள்ளிகள் பெற்று நியூசிலாந்துக்கு நெருக்கடி அளிக்கும்.


எனினும் இரு அணிகளுக்கு இடையே உள்ள ரன்ரேட் வித்தியாசத்தின் அடிப்படையில் இரு அணிகளில் ஒரு அணி அரை இறுதிக்கு தகுதி பெறும். தற்போதைய நிலவரப்படி மிக குறைவான ரன்ரேட் கொண்டுள்ள பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில்., எதிர்வரும் போட்டியில் வங்கதேச அணியை இமாலைய ரண் வித்தியாசத்துடன் வீழ்த்த வேண்டும்.


அதிர ரன்ரேட் என்றால் சாதாரணமாக அல்ல. கிரிக்கெட்டில் ஒரு மாபெரும் சாதனையை நடத்தி பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும். அதாவது., நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி குறைந்தபட்சம் 300-க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். 



அதாவது, பாகிஸ்தான் 400 ரன்கள் எடுத்தால், வங்கதேசத்தை 84 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். அதுவே, 350 ரன்கள் எடுத்தால், 38 ரன்களுக்குள் வங்கதேசத்தை கட்டுப்படுத்த வேண்டும்.


ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை நியூசிலாந்துக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றதே இதுவரை மிகப்பெரிய வெற்றியாகும்.


இந்த சாதனையை பாகிஸ்தான் உடைத்தால் மட்டுமே அதன் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். அதேவேளையில் டாஸ் வென்று ஒருவேளை வங்கதேச அணி பேட்டிங் செய்தால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு...???