IPL Auction 2021 Player List: இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் இன்று ஏலம் விட உள்ளனர். இது ஒரு மினி ஏலம். மொத்தம் 292 வீரர்கள் ஏலத்திற்கு பங்கேற்கின்றனர். இவர்களில் 164 பேர் இந்தியர்கள், 125 பேர் வெளிநாட்டினர். மூன்று இணை வீரர்களும் ஏலத்தில் இருப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எட்டு அணியின் உரிமையாளர்களால் அதிகபட்சம் 61 வீரர்களை ஏலம் எடுக்க முடியும். அதில் அதிகபட்சம் 11 வீரர்களை வாங்கக்கூடியதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) உள்ளது. இவர்களிடம் 35.4 கோடி உள்ளது. அதே நேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) வெறும் 3 வீரர்களை மட்டுமே எடுக்க வேண்டி உள்ளது மற்றும் அந்தக் அணியிடம் 10.75 கோடி உள்ளது. ஐபிஎல் அணியில் அதிக ஏலத்தொகை பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியிடம் உள்ளது. அந்த அணியில் 9 வீரர்களின் இடங்களை நிரப்ப ரூ .53.20 கோடி கையிருப்பு உள்ளது.


ALSO READ |  IPL 2022 Edition: இனி ஐ.பி.எல் போட்டியில் 10 அணிகள் விளையாடும் BCCI ஒப்புதல்


அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாய் ஏலத்தொகையில் இந்திய வீரர்களான கேதர் ஜாதவ் (Kedar Jadhav) மற்றும் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh)  இடம் பெற்றுள்ளனர். 


ஐபிஎல் 2021-க்கான ஏலம் சென்னையில் நடந்து வருகிறது. இது இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஏலம் தொடங்கும். ஐபிஎல் 2021 ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் (Star Sports Network) நேரடியாகக் காணலாம். அதேபோல நேரடி ஸ்ட்ரீமிங்கிற்கு, நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டாரைப் (Disney + Hotstar) பார்வையிடலாம். ஐபிஎல் 2021 ஏலம் தொடர்பான புதுப்பிப்புகளைப் பெற நீங்கள் ஜீஹிந்துஸ்தான்தமிழ்.இன் (ZeeHindustantamil.in) உடன் இணைந்திருக்கலாம்.


ALSO READ |  IPL Auction 2021: இந்த விதிகளின் கீழ் வீரர்கள் தனியார் ஏலத்தில் பங்கேற்கலாம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR