IPL 2021 அணிகளில் இடம் பெற்ற & OUT ஆன வீரர்கள், முழுமையான பட்டியல்

12 ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்த லசித் மலிங்கா (Lasith Malinga) இப்போது அணியில் இல்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல் இப்போது அணியில் இல்லை. ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை தக்க வைத்துக் கொள்ளவில்லை.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 20, 2021, 09:29 PM IST
  • ஜனவரி 20ஆம் தேதி, ஐபிஎல் 2021க்கான பட்டியல் வெளியிடும் இறுதி தேதி
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் க்ளென் மேக்ஸ்வெல் இல்லை.
  • ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறவில்லை
IPL 2021 அணிகளில் இடம் பெற்ற & OUT ஆன வீரர்கள், முழுமையான பட்டியல்

புதுடெல்லி: 12 ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்த லசித் மலிங்கா (Lasith Malinga) இப்போது அணியில் இல்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல் இப்போது அணியில் இல்லை. ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை தக்க வைத்துக் கொள்ளவில்லை.

ஐபிஎல் 2021-இல் தங்களுக்கு தேவையான வீரர்களை இறுதி செய்யும் நாள் ஜனவரி 20 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இறுதிப்பட்டியலை எட்டு அணிகளும் முடிவு செய்துவிட்டன. எட்டு ஐபிஎல் உரிமையாளர்களால் தக்கவைத்துக் கொண்ட / விடுவித்த அனைத்து வீரர்களின் முழுமையான பட்டியல் இங்கே:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: எதிர்வரும் ஐபிஎல் 2021 தொடருக்காக Sunrisers Hyderabad  தக்கவைத்துக் கொண்ட வீரர்கள்:

டேவிட் வார்னர் (c), அபிஷேக் சர்மா, பசில் தம்பி, புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கெளல்,  டி.நடராஜன், விஜய் ஷங்கர், விருத்திமான் சஹா, அப்துல் சமத், மிட்செல் மார்ஷ், ஜேசன் ஹோல்டர், பிரியம் கார்க், விராட் சிங்

விடுவிக்கப்பட்டவர்கள்: பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் ஆலன், யர்ரா பிருத்விராஜ், சஞ்சய் யாதவ், பி சந்தீப்

Also Read | அந்நிய மண்ணில் வெற்றிகண்டால் வந்தேமாதரம் பரிசு Viral Video

Kolkata Knight Riders: வரவிருக்கும் சீசனுக்காக தக்கவைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் இங்கே.

ஈயோன் மோர்கன் (c), தினேஷ் கார்த்திக், சுப்மான் கில், ரிங்கு சிங், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், பாட் கம்மின்ஸ், பிரசீத் கிருஷ்ணா, லாக்கி பெர்குசன், சந்தீப் வாரியர், சிவம் சவரினேவ், வருண் ஆண்ட்ராவ் , டிம் சீஃபர்ட் 

விடுவிக்கப்பட்டவர்கள்: டாம் பான்டன், கிறிஸ் கிரீன், நிகில் நாயக், சித்தார்த் எம் மற்றும் சித்தேஷ் லாட்

டெல்லி கேபிடல்ஸ்: எதிர்வரும் சீசனுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர் (c), ஷிகர் தவான், பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane), ரிஷப் பந்த், அக்சர் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, ஆர் அஸ்வின், லலித் யாதவ், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், பிரவீன் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் ஸ்டோர்டினா , சிம்ரான் ஹெட்மியர், கிறிஸ் வோக்ஸ், டேனியல் சாம்ஸ்.

இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறாத வீரர்கள்: மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, கீமோ பால், சந்தீப் லாமிச்சேன், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய்.

Also Read | BCCI: India vs England முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: வரவிருக்கும் சீசனில் Kings XI Punjab அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இவர்கள் தான்:  

கே.எல்.ராகுல் (c), கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், சர்பராஸ் கான், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, பிரப்சிம்ரன் சிங், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டான், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின், அர்ஷ்த்ரீப் சிங், ஹர்பிரீத் சிங் 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெறாத வீரர்கள்: க்ளென் மேக்ஸ்வெல், கருண் நாயர், ஹார்டஸ் வில்ஜோன், ஜகதீஷா சுசித், முஜீப் உர் ரஹ்மான், ஷெல்டன் கோட்ரெல், ஜிம்மி நீஷம், கிருஷ்ணப்பா கவுதம், தாஜிந்தர் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: வரவிருக்கும் சீசனுக்காக   தக்கவைக்கப்பட்டுள்ள Rajasthan Royals வீரர்கள்.

சஞ்சு சாம்சன் (c), பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தெவதியா, மஹிபால் லோமர், கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்க்கண்டே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், டேவிட் மில்லர் , ராபின் உத்தப்பா.

Rajasthan Royals அணியில் இருந்து, ஸ்டீவ் ஸ்மித், ஓஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், அங்கித் ராஜ்பூத், வருண் ஆரோன், டாம் குர்ரான், அனிருதா ஜோஷி, சஷாங்க் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Also Read | IPL 2021: CSK உடன் தொடரும் சின்ன தல Suresh Raina-வின் பயணம்!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: வரவிருக்கும் சீசனுக்காக தக்கவைக்கப்பட்ட Royal Challengers Bangalore அணியின் பட்டியல்:

விராட் கோஹ்லி (Virat Kohli), ஏபி டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், தேவதூத் பாடிக்கல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் பிலிப், ஷாபாஸ் அகமது மற்றும் பவன் தேஷ்பாண்டே.

Royal Challengers Bangalore அணியில் இடம் பெறாத வீரர்கள்: ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, மொயீன் அலி, பவன் நேகி, குர்கீரத் சிங் மான், சிவம் துபே, டேல் ஸ்டெய்ன், பார்த்திவ் படேல் மற்றும் உமேஷ் யாதவ். 

சென்னை சூப்பர் கிங்ஸ்: வரவிருக்கும் சீசனுக்காக தக்கவைக்கப்பட்டுள்ள Chennai Super Kings வீரர்கள்:

எம்.எஸ்.தோனி (c), என் ஜகதீசன், ஆர் கெய்க்வாட், கே.எம். ஆசிப், ஆர் ஜடேஜா, ஜே ஹேசில்வுட், கே ஷர்மா, ஒரு ராயுடு, எஸ் ரெய்னா, ஐ தாஹிர், டி சஹார், ஃபாஃப் டு பிளெசிஸ், எஸ் தாக்கூர், எம் சாண்ட்னர், டி பிராவோ, எல் என்ஜிடி, எஸ் குர்ரான், எஸ் கிஷோர்.

Chennai Super Kings அணியில் இடம்பெறாத வீரர்கள்: ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஷ் சாவ்லா

Also Read | அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் & Tamil Nadu பூர்வீக கிராமம்

மும்பை இந்தியன்ஸ்: வரவிருக்கும் சீசனுக்காக தக்கவைக்கப்பட்டுள்ள Mumbai Indians அணியினர்.

ரோஹித் சர்மா (c), குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (WK), கிறிஸ் லின், அன்மோல்பிரீத் சிங், சவுரப் திவாரி, ஆதித்யா தாரே, கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, அனுகுல் ராய், ஜஸ்பிரீத் பும்ரா சாஹர், ஜெயந்த் யாதவ், தவால் குல்கர்னி, மொஹ்சின் கான்

Mumbai Indians அணியில் இந்த ஆண்டு இடம் பெறாத வீரர்கள்: லசித் மலிங்கா, மிட்ச் மெக்லெனகன், ஜேம்ஸ் பாட்டின்சன், நாதன் கூல்டர்-நைல், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், பிரின்ஸ் பல்வந்த் ராய், டிஜிவிஜய் தேஷ்முக்.

ALSO READ | வன்முறை பதட்டங்களுக்கு மத்தியில் Jo Biden பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் America

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News