இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி தனது புதிய கேப்டனுடன் களம் இறங்க உள்ளது.   செப்டம்பரில் நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் போது விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவாதக அறிவித்தார்.  தொடர்ந்து எட்டு சீசன்களுக்கு ஆர்சிபி அணியை வழிநடத்திய கோலி தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக கோஹ்லி (INR 15 கோடி), க்ளென் மேக்ஸ்வெல் (INR 11 கோடி), மற்றும் முகமது சிராஜ் (INR 6 கோடி) ஆகியோரை RCB தக்க வைத்துக் கொண்டுள்ளது. 57 கோடி ரூபாய் பர்ஸுடன் ஏலத்தில் இறங்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது: சீறும் பஞ்சாப் நிர்வாகம்!


இருப்பினும், வரும் சீசனில் ஆர்சிபியை யார் வழிநடத்துவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.  ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் தான் புதிய கேப்டனாக இருக்க வேண்டும் என்று முன்னாள் ஆர்சிபி வீரரும் பயிற்சியாளருமான டேனியல் வெட்டோரி தெரிவித்து உள்ளார். ஐபிஎல் 2021-ல் பஞ்சாப் கிங்ஸால் (PBKS) அணியில் இருந்து வெளியிடப்பட்ட பிறகு ஆர்சிபி அணிக்காக விளையாடி மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார். 15 போட்டிகளில் 42 க்கு மேல் சராசரியாக 513 ரன்கள் எடுத்தார், இதில் 6 அரை சதங்களும் அடங்கும்.



RCB அணி ஏலத்தில் மற்றொரு கேப்டனை எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை, அதற்குப் பதிலாக மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வெட்டோரி தெரித்துள்ளார்.  கிளென் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்கு சிறந்த கேப்டனாக இருப்பார்.  அவருக்கு மெல்போர்ன் ஸ்டார்ஸ் (in the Big Bash League) கேப்டனாக இருந்த அனுபவம் உள்ளது. மேக்ஸ்வெல், மற்ற அணிகளில் இருந்து வெளியேற்ற பட்ட பின்பும், RCB-ல் தனது முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  எனவே, அவரை கேப்டனாக நியமிப்பதன் மூலம் இன்னும் சிறந்த வீராக ஐபிஎல்-ல் இருப்பார் என்று வெட்டோரி தெரித்தார்.


ALSO READ ஓமிக்ரான் தொற்று காரணமாக தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் மாற்றம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR