இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது: சீறும் பஞ்சாப் நிர்வாகம்!

கேஎல் ராகுலை புதிய அணிகள் தங்கள் அணிக்கு வருமாறு அழைத்து இருந்தால் அது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது என்று பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது  

Written by - RK Spark | Last Updated : Dec 2, 2021, 05:29 PM IST
இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது: சீறும் பஞ்சாப் நிர்வாகம்! title=

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேஎல் ராகுல் கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக எல்லாவித சுதந்திரத்துடன் விளையாடி வருகிறார்,  இருப்பினும் அவர் அணியை விட்டு வெளியேறியது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை.  மேலும் அவர் ஏற்கனவே ஒரு புதிய அணிகளிடம் இருந்து அணுகப்பட்டிருந்தால் அது பிசிசிஐ விதிமுறைகளுக்கு எதிரானது என்று பஞ்சாப் அணி நிர்வாகம் கூறியுள்ளது.  

ALSO READ ODI captaincy: ஒருநாள் போட்டி கேப்டனாக விராட் கோலி தொடர வாய்ப்பு உள்ளதா?

2020 ஐபிஎல் சீசனில் அஸ்வினுக்கு பதிலாக ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.   அந்த சீசனில் ராகுல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், அணியை பிளே-ஆஃப்களுக்கு அழைத்துச் செல்லத் தவறினார். தற்போது ராகுல் புதிய அணியான லக்னோவுடன் இணைந்துள்ளார் எனவும், RPSG குழுமத்திற்கு சொந்தமான அணியை வழிநடத்த உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில்," நாங்கள் ராகுலைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினோம், ஆனால் அவர் மீண்டும் ஏலத்திற்குச் செல்ல விரும்பினார்.  நாங்கள் விடுவிப்பதற்கு முன் அவரை வேறு அணி நிர்வாகம் அணுகியிருந்தால், அது நெறிமுறைக்கு எதிரானது.  2010 ஆம் ஆண்டில், ரவீந்திர ஜடேஜா அப்போதைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸால் விடுவிக்கப்படுவதற்கு முன்பே மற்ற அணிகளுடன் பேரம் பேச முயன்றதற்காக ஓராண்டு இடைநீக்கம் செய்யபட்டார்.   புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் மூன்று வீரர்களை தேர்வு செய்ய டிசம்பர் 25 வரை அவகாசம் உள்ளது. அஸ்வின், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் ஆகியோர் தற்போது ஏலத்தில் உள்ளனர்.  

rahul

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மெகா ஏலத்திற்கு முன்னதாக அஸ்வினை புதிய அணிகள் எடுக்கவில்லை என்றால் அவரை மீண்டும் அழைத்து வர பஞ்சாப் அணி ஆர்வமாக உள்ளது. நாங்கள் மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு உள்ளோம்.  மயங்க் மற்றும் அர்ஷ்தீப்பை தக்கவைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மயங்க் எங்களுக்கு ஒரு அற்புதமான வீரராக இருந்து வருகிறார், உண்மையில் உரிமையாளருக்கு விசுவாசமாக இருக்கிறார். அர்ஷ்தீப்பும் சிறிது காலம் எங்களுடன் இருந்துள்ளார், அவர் முன்னேற்றம் அடைவதை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் அவர் இந்தியாவுக்காக விளையாடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.  முகமது ஷமியை மீண்டும் ஏலத்தில் பெற முயற்சிப்போம்.  வரும் ஏலத்தில் சிறந்த வீரர்களை நாங்கள் ஏலத்தில் எடுக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

ALSO READ முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஐசிசி தரவரிசையில் இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News