இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்
20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் முடிவடைகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி இருந்து வருகிறார். இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரி வரும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடிவந்த அனில் கும்ப்ளே (Anil Kumble) அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் (VVS Laxman) ஆகிய இருவரில் ஒருவர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ (BCCI) வட்டாரம் கூறிவருகிறது.
ALSO READ | IPL மீண்டும் இன்று முதல்; முழு அட்டவணை, தோனியும், ரோஹித்தும் களத்தில்
முன்னதாக ஏற்கனவே 2016 - 17ம் ஆண்டில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே, பதவியேற்ற ஓராண்டிற்குள் விராட் கோலியுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக பதவி விலகினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ஐதராபாத் அணியின் ஆலோசகருமான வி.வி.எஸ்.லட்சுமணும் பயிற்சியாளர் பதவிக்கான பந்தய களத்தில் இருக்கிறார். 134 டெஸ்ட், 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வி.வி.எஸ்.லட்சுமண் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரி தான் ஓய்வு பெறுவதை தொடர்பாக பேட்டி ஒன்றில் கூறியதாவது., இந்திய அணியின் பயிற்சியாளராக நான் விரும்பியதை எல்லாம் சாதித்து விட்டதாக நம்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் நமது அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றோம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை டெஸ்ட் போட்டியில் அவர்களது இடத்திலேயே சாய்த்ததை உச்சபட்ச சாதனையாக கருதுகிறேன். இதில் லண்டன் லார்ட்ஸ், ஓவலில் கண்ட டெஸ்ட் வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 20 ஓவர் உலக கோப்பையை வென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் அணியினர் முழுதிறமையை வெளிப்படுத்தினால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ | இந்திய அணியின் டி 20 கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வேண்டும் என கோரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR