மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி ஓவரில் திரில்லாக வெற்றி பெற்றது பெங்களூரு அணி. இப்போட்டியில் பின்வரிசையில் களமிறங்கிய பெங்களூரு வீரர் ஷபாஸ் அகமது, அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து மெகா சிக்சர்களை பறக்கவிட்டு ஆச்சரியப்படுத்தினார். இக்கட்டான இப்போட்டியில் இவர் எடுத்த 27 ரன்கள் பெங்களுரு அணியின் வெற்றியை எளிதாக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | லக்னோ அணியை வீழ்த்த CSK அணிக்குள் என்டிரியாகும் புதிய வீரர் - தோனியின் மாஸ் பிளான்


ஆன்ரே ரஸ்ஸல் vs ஷபாஸ் அகமது


பெங்களுரு மற்றும் கொல்கத்தா போட்டியில் ஆன்ரே ரஸ்ஸல் மற்றும் ஷபாஸ் அகமதுவின் தனிப்பட்ட மோதலையும் பார்க்க முடிந்தது. பெங்களுரு அணி பந்துவீசியபோது, ஷபாஸ் அகமதுவின் பந்துவீச்சில் ஆன்ரே ரஸ்ஸல் 2 சிக்சர்களை பறக்கவிட்டு 16 ரன்களை எடுத்தார். பின்னர், கொல்கத்தா அணியில் ஆன்ரே ரஸ்ஸல் பந்துவீசியபோது பேட்டிங் செய்த ஷபாஸ் அகமது அவருடைய ஓவரில் 2 மெகா சிக்சர்களை விளாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 20 பந்துகளை எதிர்கொண்ட 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் ஏலத்தில் 2.40 கோடிக்கு பெங்களூரு அணி இவரை ஏலம் எடுத்தது. 



பெங்கால் வீரர்


ஷாபாஸ் அகமது உள்நாட்டு கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன், ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷாபாஸ் அகமது, முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை  16 போட்டிகளில் களமிறங்கி 779 ரன்கள் எடுத்துள்ளார். ஆல்ரவுண்டரான இவர் 45 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 26 லிஸ்ட் ஏ போட்டிகளில் 662 ரன்கள் எடுத்திருப்பதுடன் 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 42 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளையும் 320 ரன்களையும் எடுத்துள்ளார். ஷாபாஸ் கடந்த 3 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். 


ஐபிஎல் ஹிஸ்டிரி


இடது கை பேட்ஸ்மேன் ஷாபாஸ் அகமது இதுவரை 15 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் இந்த 15 போட்டிகளில் 10.88 சராசரியில் 87 ரன்கள் எடுத்துள்ளார். 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரஞ்சி கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். தன்னுடைய முன்மாதிரி யார்? என அவரிடம் கேட்டபோது ஜடேஜா என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | கொல்கத்தா டீமில் இருந்த இந்த ஒன்று ஆர்சிபியில் இல்லை! -தினேஷ் கார்த்திக் வருத்தம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR