கொல்கத்தா டீமில் இருந்த இந்த ஒன்று ஆர்சிபியில் இல்லை! -தினேஷ் கார்த்திக் வருத்தம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் இருந்து எந்த ஒன்றை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்றால் அது தமிழில் பவுலர்களுடன் பேசுவதைதான் என்று தினேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 31, 2022, 01:57 PM IST
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் இருந்து எந்த ஒன்றை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்றால் அது தமிழில் பவுலர்களுடன் பேசுவதைதான்.
  • வருண் சக்ரவர்த்தி பேட்டிங்கிற்கு வரும்போது தான் தாறுமாறாக அவரிடம் பேசுவேன். ஆனால் ஆர்சிபி டீமில் தமிழில் பேச முடியவில்லை.
கொல்கத்தா டீமில் இருந்த இந்த ஒன்று ஆர்சிபியில் இல்லை! -தினேஷ் கார்த்திக் வருத்தம் title=

அண்மையில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் தினேஷ் கார்த்திக், "வருண் சக்ரவர்த்தி பேட்டிங்கிற்கு வரும்போது தான் தாறுமாறாக அவரிடம் பேசுவேன். ஆனால் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டீமில் இருப்பதால் பவுளர்களிடம் தமிழில் பேச முடியவில்லை. அனைவரும் ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே பேசுகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் இருந்து எந்த ஒன்றை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்றால் அது பவுலர்களுடன் தமிழில் பேசுவது தான். ஆர்சிபியில் என்னால் தமிழில் யாரிடமும் பேச முடியாது. அது தான் வருதமளிக்கிறது." என்றார்.

Dinesh Karthik

மேலும், "அதேபோல் தனது இதயத்திற்கு நெறுக்கமான டீமை எதிர்த்து விளையாட சற்று நெருடலாக தான் இருக்கிறது. இந்த சூழலில் நான் எனது பழைய பள்ளியை விட்டு மாறியுள்ளது போலும், எனது பழைய பள்ளிக்கு எதிராக விளையாடுவது போலும் உணர்கிறேன். 

மேலும் படிக்க | ரெய்னாவுக்குத் திடீர் விருது: ஏன் தெரியுமா?!

கொல்கத்தா டீமில் நான் 4 வருடங்கள் இருந்தேன். அந்த நாட்களில் நான் பல நல்ல நினைவுகளை சேர்த்தேன். நான் அந்த டீமில் நன்றாக என்ஜாய் செய்தேன்." என்றார்.

Dinesh Karthik

நேற்று நடந்த ஐபிஎல் 15ஆவது சீசனின் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளைப்பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.

நேற்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 128 ரன்களை இலக்காக வைத்தது. பின்பு பேட்டிங்கிற்கு இறங்கிய ஆர்சிபி அணியில் டூ பிளஸி, கோலி போன்ற முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

ஆட்ட இறுதியில் 12 பந்துகளில் 17 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் எவ்வித பதற்றத்தையும் காட்டாமல், கூலாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.  

Dinesh Karthik

மேலும் இதனால் அவர் தோனிக்கு அடுத்தபடியாக கூலான பிளேயர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

இதனால் ஆர்சிபி அணியினர் இவருக்கு புகழாரத்தை சூட்டி வருகின்றனர். மறுபடியும் பார்ம்மிற்கு வந்துள்ள தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஐ.பி.எல்லுக்கு வரும் புது விதி: வரமா, சாபமா?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News