ஜொலிக்கும் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன்!!
கான்பூரின் கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது. ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாவும், விராத் கோலி தொடர் நாயகனாகவும் தேர்ந்தேடுக்கப்ட்டார்.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா(147) மற்றும் விராட் கோலி(113) ஆகியோர் சதம் அடித்தனர். இதன் மூலம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்தியா 2-1 என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்ற உதவியது.
இந்த தொடரில் இந்திய கேப்டன் விராத் கோலி 2 சதங்களை அடித்துள்ளார். இதுவரை ஒரு நாள் போட்டியில் 32 சதங்களை அடித்துள்ள விராட் கோலி, அதிக சதங்களை அடித்த வீரர்களில் சச்சினுக்கு அடுத்த படி இவர் இருக்கிறார். சச்சின் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா கடைசி மற்றும் 3_வது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தார். இது இவருக்கு 15 சதமாகும். இவர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.