உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை யாரால் நிரப்பமுடியும்?
World Cup 2023: காயம் காரணமாக 2023 உலகக் கோப்பையில் பும்ராவிளையாடுவாரா? அவர் இல்லாத நிலையில் இந்திய அணி எப்படி இருக்கும்?
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக, அவர் உடல் தகுதி பெற வாய்ப்பில்லை. ஜஸ்பிரித் பும்ராஇல்லாத நிலையில் இந்திய அணியின் திட்டம் எப்படி இருக்கும்?
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2023, அதாவது இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. உலக கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்தியா, இரண்டாவது முறையாக மெகா நிகழ்வை நடத்துகிறது. 2011ம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மென் இன் ப்ளூ கோப்பையை வென்றது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரோஹித் ஷர்மாவின் இந்திய அணி, மீண்டும் உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சிக்கும்.ஆனால், இந்திய அணியில் இன்னும் பல குறைபாடுகள் உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்..
அணி நிர்வாகம், கேப்டன் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் கவலைப்படுவது பேட்டிங் ப்ற்றி இல்லை, இந்திய அணியில் போதுமான பேட்டர்கள் உள்ளனர். இந்திய அணியின் பந்து வீச்சு தான் அனைவருக்கும் கவலைகளைக் கொடுக்கிறது. அதிலும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது நிலைமையை மோசமாக்குகிறது.
ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த T20 இல் விளையாடிய பிறகு, T20 உலகக் கோப்பைக்கு சற்று முன்னதாக, பும்ரா முதுகில் காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க | அர்ஜுன் டெண்டுல்கருக்கு பயிற்சி போறாது! பாகிஸ்தான் கிரிக்கெட்டரின் ‘ஃப்ரீ’ அட்வைஸ்
அவர் துபாயில் நடந்த 2022 ஆசிய கோப்பையையும் தவறவிட்டார் என்பதும், இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெறத் தவறிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, டி20 உலகக் கோப்பையின் போது, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில், இந்தியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதைத் தொடர்ந்து, பார்டர்-கவாஸ்கர் தொடர் உட்பட பல தொடர்களில் பும்ரா இடம் பெறவில்லை. அதோடு, அவரது காயமும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2023 ஐபிஎல் தொடரில் இடம் பெறாமல் பும்ராவை விலக்கி வைத்துள்ளது.
தனது காயத்திற்காக, பும்ரா நியூசிலாந்தில் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். அவரது முதுகுவலியின் உணர்திறன் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, NCA இன் ஊழியர்களோ, வாரியமோ அல்லது குழு நிர்வாகமோ அவரை போட்டி கிரிக்கெட்டில் விளையாட அவசரப்படுத்த மாட்டார்கள் என்பது உறுதி.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் பும்ராவால் திறனோடு பங்கேற்க முடியுமா என்ற கேள்வி அனைவருக்கும் ஏழுகிறது. நேர்மறையாக பார்த்தால், அவர் நல்ல உடற்தகுதியுடன் போட்டிகளில் கலந்துக் கொள்ளலாம். ஆனால், ஒருவேளை அப்படி முடியாவிட்டால்? பும்ரா இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது?
அதுமட்டுமல்ல, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக, இந்திய அணி வீரர்களை தயார்நிலையில் வைக்கவேண்டும்., 2023 உலகக் கோப்பையில் ஐஸ்ப்ரீத் பும்ரா கலந்துக் கொண்டாலும்கூட, ஏதேனும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை சமாளிக்க இந்திய அணி வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.
எனவே, இந்திய அணியின் கவனத்தில் இருக்கும் வீரர்கள் யார்? புதிய பந்து வீச்சாளர்கள் ஏராளமாக இல்லை, ஒரு சிலர் இருந்தாலும், சிலருக்கு காயங்கள் இருக்கிறது, சிலர் ஃபார்மில் இல்லை.
முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் 2023 உலகக் கோப்பையில் இந்தியா பரிசீலிக்கும் இரண்டு வீரர்கள். அதேபோல, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், காயத்தால் பாதிக்கப்பட்ட தீபக் சாஹரையும் நிர்வாகம் கவனிக்கக்கூடும்.
மற்றொரு சூழ்நிலையில், அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் உடற்தகுதியுடன் வந்தால், அவரும் இந்திய அணியில் பரிசீலிக்கப்படலாம். காஷ்மீர்-எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக், பும்ராவுக்கான இடத்தைப் பெறுவதில் முன்னணியில் உள்ளார். காயம் காரணமாக வெளியேறிய பிரசித் கிருஷ்ணா, பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், விக்கெட் எடுக்கும் திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவேஷ் கான் என பல வீரர்கள் இருக்கின்ரனர்.
பல பந்து வீச்சாளர்கள் இருப்பதால், ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர்த்து, உலகக் கோப்பைக்கான சிறந்த பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பதில் அணி நிர்வாகம் கவனம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், யார்க்கர்களை தொடர்ந்து வீசும் பும்ராவின் திறமையை யாராலும் மறாக்க முடியாது. அவர் செய்வதில் பாதியையாவது செய்யும் மற்றொருவரை வளர்க்க முயற்சிப்பது இந்தியாவுக்கு நீண்ட காலத்திற்கு பயனளிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ