FIFA 2022: கத்தார் கால்பந்து திருவிழாவை சிலர் புறக்கணிப்பது ஏன்? மனித உரிமை மீறல்?
Boycotting Qatar: பிரபல பாடகி ஷகிரா கத்தார் உலகக் கோப்பை நிகழ்ச்சியை ரத்து செய்தார்... அதேபோல, மற்ற பிரபலங்களும் ஏன் FIFA சாம்பியன்ஷிப்பைப் புறக்கணிக்கிறார்கள்?
நியூடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபீபா உலகக்கோப்பை போட்டி உலகம் முழுவதும் பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பையை பல பிரபலங்களும், சில நாடுகளும் ஏன் புறக்கணிக்கின்றன? இந்த கேள்விக்கான பதில் சற்று விரிவானது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அரபு நாடான கத்தார் நடத்துகிறது. நவம்பர் 20 அன்று தொடங்கிய இந்தப் போட்டியை உலகம் முழுவதும் ஐந்து பில்லியன் பார்வையாளர்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் உலகக் கோப்பை போட்டிகளை பலரும் விமர்சிப்பதும், சர்ச்சைகளை எழுப்புவதும், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பானது இல்லை, இந்த எதிர்ப்பு, ஆடுகளத்திற்கு வெளியே நடக்கும் சர்ச்சைகள் தொடர்பானவை.மனித உரிமை மீறல்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கத்தார் நடத்தும் முறை ஆகியவற்றிற்கான விமர்சனங்களால் கத்தாரில் நடைபெறும் ஃபீபா உலகக்கோப்பை பரவலான எதிர்ப்புகளை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | FIFA 2022: ஃபீபா உலககோப்பை போட்டிகளின் முதல் மகளிர் ரெஃப்ரிகள்
கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் முதல் அரபு நாடு கத்தார் ஆகும். இந்தப் போட்டிகள் நடைபெறும் கால்பந்து மைதானங்கள் ஐந்தும், மைதானத்தை குளுமையாக்கும் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டவை ஆகும்.
பாலைவனத்தில் அமைந்திருக்கும் கத்தார் நாட்டில் விளையாட தடையாய் இருக்கும் வெப்பத்தை எதிர்த்து 36 டிகிரி வரை வெப்பநிலையைக் குறைக்கும் திறன் கொண்ட தொழில்நுட்பம் இது. இந்த புதிய மைதானங்களை நிர்மாணிப்பதில் பயன்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்தியது தொடர்பாக கத்தார் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கத்தார் உலகக் கோப்பையை யாரெல்லாம் புறக்கணிக்கின்றனர்?
பிரபல பாடகி ஷகிரா நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார், ஆனால் கடைசி நிமிடத்தில் மனம் மாறினார். அதேபோல தொடக்க விழாவில் துவா லிபா நிகழ்ச்சி நடத்துவதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் அந்த ஊகங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
"கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டித்தொடரின் தொடக்க விழாவில் நான் பங்கேற்பேன் என்று வெளியாகும் செய்திகள் தவறு” என்று கூறிய பிரிட்டிஷ் பாப் நட்சத்திரம், அது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க | இந்த சாதனைகள் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை: ஜெகதீசனை நீக்கிய சிஎஸ்கே!
உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை வென்றபோது கத்தார் கொடுத்த அனைத்து மனித உரிமைகள் உறுதிமொழிகளையும் நிறைவேற்றிய பிறகு, கத்தாருக்குச் செல்வதைப் பற்றி யோசிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல, பிரபல பாடகர் ராட் ஸ்டீவர்ட்டும் கத்தார் ஃபீபா விளையாட்டு போட்டிகளுக்கான கலைநிகழ்ச்சிகளுக்கு வந்த வாய்ப்பை நிராகரித்தார். "15 மாதங்களுக்கு முன்பு அங்கு விளையாடுவதற்காக எனக்கு 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிறைய பணம் வழங்கப்பட்டது. நான் அதை நிராகரித்தேன். செல்வது சரியல்ல, ”என்று அவர் சண்டே டைம்ஸிடம் கூறினார்.
(Picture Courtesy: FIFA/TWITTER)
அப்படி என்ன மனித உரிமை மீறல்கள் என்ன? தி கார்டியன் பத்திரிகை மேற்கொண்ட விசாரணையில், கத்தாரில் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பெற்றதில் இருந்து 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளனர், இது போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பான கட்டமைப்புக்காக பணியாற்றியவர்களின் பலி என்று கருதப்படுகிறது. இந்த கட்டுமானங்களுக்காக, சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டது.
இந்த புலம்பெயர் தொழிலாளர் இறப்புகள் தொழில் அல்லது வேலை செய்யும் இடத்தால் வகைப்படுத்தப்படவில்லை என்றாலும், வளைகுடாவில் தொழிலாளர் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற குழுக்கள் உறுதிபடுத்துகின்றன. "இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள், ஃபீபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமையை கத்தார் வென்ற பிறகு அதாவது, 2011 முதல் உயிரிழந்தவர்கள்” என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | FIFA World Cup 2022: பிரபல கால்பந்தாட்ட வீரர்களின் காதல் துணைகள்
2019 ஆம் ஆண்டில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வெப்பம் தாங்க முடியாமல் இறந்ததாக கூறப்படுகிறது. வெப்பமான கோடை நாட்களில், 120 டிகிரிக்கு மேல் வெப்பம் இருக்கும் என்றால், பாலைவன தேசத்தில் நிலவும் வெப்பத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே மலைப்பாக இருக்கிறது.
கத்தார் நாட்டில் பெண்களுக்கான உரிமையும் குறைவு. கத்தார் நாட்டில் நடைபெறும் இக்கால்பந்து போட்டியை வெளிநாடுகளிலிருந்து காண வரும் பெண் ரசிகர்கள், நாட்டின் விதிகளை மதிக்கும் படி உடைகளை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கவர்ச்சியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று விதிமுறைகளை கடுமையாக்கியிருக்கும் கத்தார், அதை கடைப்பிடிக்க தவறும் பெண்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது சர்வதேச ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மைதானங்களில் ரசிகர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளதும் சர்ச்சைகளை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | FIFA 2022: 4 கோல் வித்தியாசத்தில் ஈரானை தோற்கடித்த இங்கிலாந்து கால்பந்து அணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ