ஆர்சிபி கப் ஜெயிக்காததற்கு காரணம் என்ன...? - சஹால் சொன்ன பதில்!
16 சீசன்களில் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வெல்லாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் கருத்து தெரிவித்தார்.
Chahal About RCB: 16 சீசன்களில் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வெல்லாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் கருத்து தெரிவித்தார்.
Chahal About RCB: உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இன்னும் ஐபிஎல் தொடரில் ஒரு பட்டத்தை கூட வெல்லவில்லை. தொடர்ச்சியாக 16 சீசன்களில் விளையாடியுள்ள ஆர்சிபி, பெரும்பாலான சீசன்களில் லீக்கில் மிகச்சிறந்த அணியாக, பல்வேறு முன்னணி வீரர்களை வைத்திருந்த போதிலும், ஆர்சிபியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.
ஆர்சிபி அணியில் 8 சீசன்கள் செலவிட்ட வீரரான யுஸ்வேந்திர சாஹலிடம் 'ஆர்சிபி ஏன் ஐபிஎல் பட்டத்தை இதுவரை வெல்லவில்லை?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. சாஹல், தானே பதிலைக் கண்டுபிடிக்க முயன்றார், நேர்மையான பதிலைக் கொடுத்தார்.
தி ரன்வீர் ஷோவில் நடந்த அந்த உரையாடலில் சாஹல், "நான் 8 ஆண்டுகளாக அந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்" என்றார். 2021ஆம் ஆண்டு சீசனுக்குப் பிறகு ஆர்சிபி அணியை விட்டு வெளியேறிய சாஹல், 2016ஆம் ஆண்டு சீசனை நினைவு கூர்ந்தார். அதில், ஆர்சிபி ஐபிஎல் பட்டத்தை வெல்வதற்கு மிக அருகில் வந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் பரிதாபமாக தோற்றது.
மேலும் படிக்க | Wimbeldon Final: 5 மணிநேர போர்... ஜோகோவிக்கின் கனவை உடைத்த 20 வயது அல்கராஸ்!
"2016இல், கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல். ராகுல் இருந்த நிலைமையில், எங்களுக்கு பட்டத்தை வெல்ல சிறந்த வாய்ப்பு கிடைத்தது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தோம். கடைசியாக 7 ஆட்டங்களில் 6இல் வெற்றி பெற்றோம். டெல்லிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே எனது முதல் ஊதா நிற தொப்பி கிடைத்தது. நாங்கள் தோற்றால், முதல் 4 இடங்களை விட்டு வெளியே இருப்போம், வெற்றி பெற்றால், இரண்டாவது இடத்தைப் பிடிப்போம் என்ற சூழல் இருந்தது.
"நாங்கள் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு சென்றோம். நாங்கள் சின்னசாமி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம்ய ஆனால், இறுதிப்போட்டியில் 8-10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். அது வலியை ஏற்படுத்தியது" என்றார் சஹால்.
தோல்வியுற்ற சீசன்களுக்கு பிறகு நடக்கும் உரையாடல்களைப் பற்றி கேட்டபோது, அடுத்த சீசனில் வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்பது பற்றி எப்போதும் பேச்சுக்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், நல்ல கிரிக்கெட்டை விளையாடி அணி தோற்றால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
"அடுத்த ஆண்டு வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நாங்கள் பேசுவோம். நல்ல கிரிக்கெட்டை விளையாடி நீங்கள் தோற்றால், அது மோசமாக பாதிக்காது. ஒன்று முயற்சி செய்து தோற்றுப் போவது, மற்றொன்று ஆரம்பத்தில் இருந்தே இழப்பது. ஒருமுறை 6 ஆட்டத்தில் தோல்வியடைந்தோம், 7வது போட்டியில் வெற்றி பெற்றோம் என கொண்டாடினோம். கிரிக்கெட்டில் இந்த மாறியான பக்கங்களையும் காட்டுகிறோம். இந்த முறை ராஜஸ்தான் சிறந்த அணியாக இருந்ததாலும் எங்களால் பிளே-ஆப் வரை தகுதி பெற முடியவில்லை. நம் கையில் இல்லாத விஷயங்கள், அதைப் பற்றி அதிகம் யோசிக்க மாட்டோம்" என்று சஹால் கூறினார்.
மேலும் படிக்க | குஜராத்தில் கிரிக்கெட் மைதானத்திலேயே உயிரிழந்த 20 வயது வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ