இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் 191 ரன்கள் இலக்கை அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி-20 போட்டி நேற்று கிங்ஸ்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 


தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணியின்  கேப்டன் மற்றும் தவான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர்களை பதம் பார்த்தனர். 


> 22 பந்துகளில் 39 ரன்களை குவித்த கோலி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 


> 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.


> 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் தினேஷ் 29 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 


> தோனி 2 ரன்களில் வெளியேறினார்.


20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 190 ரன்களை குவித்தது. 


191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டத்தை தொடங்கியது. 


வெஸ்ட் இண்டீஸ் அணி 19-வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.


லீவிஸ் 125 ரன்களுடனும், சாமுவேல்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் குல்தீப் யாதவ் மட்டும் 1 விக்கெட் வீழ்த்தினார்.