இன்றைய இரண்டு போட்டிகள் பிளே ஆப்பை மாற்றுமா?
ஐபிஎல் 2021 கடைசி இரண்டு லீக் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
ஐபிஎல் 2021 போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. செப்டம்பர் மாதம் முதல் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் மிக பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது. இருப்பினும் ஹைதராபாத் அணியை சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணமாக நடப்பு ஐபிஎல் போட்டியில் இருந்து அவர் விளக்கினார்.
தற்போது லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் 4வது இடத்திற்கு கிட்ட தட்ட 4 அணிகள் போட்டி போட்டன. எனினும் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை கொல்கத்தா அணி வென்றதன் மூலம் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் பிளே ஆப் செல்லும் கனவில் இருந்த மும்மை, பஞ்சாப் அணியின் கனவு பறிபோனது.
இன்று இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. சன்ரைசஸ் மற்றும் மும்மை அணியும், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆப்பில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. எனவே இன்றைய போட்டியின் மீது உள்ள சுவாரஸ்யம் சற்று குறைந்து காணப்படுகிறது. சன்ரைசஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்மை அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. ஆனாலும் இதற்கான வாய்ப்பு மிகவும் கம்மியாகவே உள்ளது.
டெல்லி மற்றும் சென்னை அணி தகுதி சுற்று முதல் போட்டியிலும், பெங்களூரு மற்றும் கொல்கத்தா எலிமினேட்டர் போட்டியிலும் களம் இறங்கவுள்ளன.
ALSO READ டி20 உலகக் கோப்பை: வீரர்களை கண்காணிக்க ஐசிசியின் புதிய முடிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR