One Man Army-யாக புஜாரா; 250 ரன்களுக்கு சுருண்டது இந்தியா!
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்துள்ளது!
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்துள்ளது!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளயாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் துவங்கியது.
இந்திய நேரப்படி காலை 5.30 மணியளவில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 2(8), முரளி விஜய் 11(22) ரன்களுக்கு வெளியேற, முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய புஜாரா நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 246 பந்துகளில் 123 ரன்கள் குவித்த புஜாரா ஆட்டத்தின் 87.5-வது பந்தில் வெளியேறினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற புஜாராவின் சதம் இந்தியாவினை 250 ரன்கள் குவிக்க உதவியது.
புஜாரை தவிர ரோகித் ஷர்மா 37(61), ரிஷாப் பன்ட் 25(38), அஸ்வின் 25(76) ரன்கள் குவித்தனர். எனினும் இந்திய அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
புஜாரா வெளியேறிய பின்னர் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முகமது ஷமி 6(9) ரன்களுடன் களத்தில் இரந்தார். நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடரும் பட்சத்தில் ஜாஸ்பிரிட் புமரா ஷமியுடன் இணை சேருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்ச், ஹேசல்வுட், பாட் கும்மினிஸ். நாதன் லெயின் தலா 2 விக்கெட் குவித்துள்ளனர்.