நடத்தை விதிகளை மீறிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாடத் தடை விதித்தது ICC
Harmanpreet Kaur suspension: இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், நடத்தை விதிகளை மீறியதற்காக 2 போட்டிகளில் விளையாட முடியாது. ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசி நடத்தை விதிகளை இரண்டு முறை மீறினார்
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், நடத்தை விதிகளை மீறியதற்காக 2 போட்டிகளில் விளையாட முடியாது. இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசி நடத்தை விதிகளை இரண்டு முறை மீறினார். எனவே, அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி அவருக்கு தடை விதித்துள்ளது.
சனிக்கிழமை (ஜூலை 22,2023) டாக்காவில் பங்களாதேஷுக்கு எதிரான ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது போட்டியின் போது இந்த நடத்தை மீறல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் இன்னிங்ஸின் 34 வது ஓவரில் ஸ்பின்னர் நஹிதா அக்டரிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆன பிறகு கவுர் தனது மட்டையால் விக்கெட்டைத் தாக்கி விரக்தியை வெளிப்படுத்தியபோது முதல் சம்பவம் நடந்தது.
லெவல் 2 குற்றத்திற்காக கவுருக்கு அவரது போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் அவரது ஒழுக்காற்று சாதனையில் மூன்று நெகடிவ் புள்ளிகள் பெற்றார். வங்கதேச அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி ‘டை’யில் முடித்தது.
இதனால் ஒருநாள் போட்டி தொடருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. பொதுவாக, ஆட்டம் ‘டை’யில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவது வழக்கம். ஆனால், போட்டியை நடத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால், சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததால், கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.
மேலும் படிக்க | ஐபிஎல்-ல் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்! பிசிசிஐ-ன் புதிய திட்டம்!
"நடுவரின் முடிவில் கருத்து வேறுபாட்டைக் காட்டுவது" தொடர்பாக, வீரர்கள் மற்றும் வீரர்களின் ஆதரவுப் பணியாளர்களுக்கான ICC நடத்தை விதி 2.8ஐ மீறியதற்காக அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
"சர்வதேச போட்டியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான பொது விமர்சனம்" தொடர்பான லெவல் 1 குற்றத்திற்காக கவுருக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது, அப்போது, கவுர் போட்டியில் நடுவரை வெளிப்படையாக விமர்சித்தார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை இந்திய கேப்டன் ஒப்புக்கொண்டார் மற்றும் எமிரேட்ஸ் ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்களின் குழுவின் அக்தர் அகமது முன்மொழிந்த தடைகளுக்கு ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக, முறையான விசாரணை தேவையில்லை என்பதால் தண்டனைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
மேலும் படிக்க | ’டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் மாதிரி ஆடணும்’ இஷான் கிஷனுக்கு ஜாகீர்கான் அறிவுரை
தனக்கு வழங்கப்பட்ட எல்பிடபிள்யூ-க்கு எதிராக ஹர்மன்பிரீத் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆடுகளத்தில் தனது மட்டையைக் கொண்டு ஸ்டெம்புகளை தாக்கியதுடன், கோப்பையை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வில் வங்கதேச அணி கேப்டன் நிகர் சுல்தானாவிடம் கோபமாக பேசினார்.
‘நடுவர்கள் இல்லாமல் நீங்கள் நீங்கள் இந்தப் போட்டியை சமன் செய்திருக்க முடியாது; அவர்களும் புகைப்படத்தில் இடம்பெறட்டும்’ என்று கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இரு குற்றங்களுக்காக இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலையை இந்திய மகளிர் அணி கேப்டன் எதிர் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | மழையால் இந்தியாவுக்கு வந்த இழப்பு... முதலிடத்தை வசமாய் பிடித்த பாகிஸ்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ