பெண்கள் ஆசிய கோப்பை: இந்திய அணி சாம்பியன்
6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இதுவரை நடந்துள்ள 6 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அனைத்திலும் இந்தியாவே பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்தியா.