மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி சாம்பியன்

மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளனர்.
மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் சீன அணி மோதின. இந்த தொடர் ஜப்பானில் இன்று நடைபெற்றது.
இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் ஷுட் அவுட் முறையில் 5 - 4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.