11-வது மகளிர் உலக கோப்கை போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். கடந்த 15-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது. 


இதன் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.


முதல் அரை இறுதியில் இங்கிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.


2-வது அரை இறுதியில் இந்தியா 76 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


இந்நிலையில் இறுதிப் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளதால் இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.