மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட இந்த வீரர்... கிளாசெனை அவுட்டாக்கிய அந்த `ஸ்பெஷல் பந்து`
![மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட இந்த வீரர்... கிளாசெனை அவுட்டாக்கிய அந்த 'ஸ்பெஷல் பந்து' மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட இந்த வீரர்... கிளாசெனை அவுட்டாக்கிய அந்த 'ஸ்பெஷல் பந்து'](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2025/01/28/471797-klassenm.jpeg?itok=TbVrRLmD)
Latest Cricket News Updates: அதிரடி வீரர் கிளாசெனை, அற்புதமான ஒரு பந்தை வீசி ஆட்டமிழக்கச் செய்துள்ளார் 18 வயதே ஆன இளம் வீரர்... யார் அவர்... அவர் வீசிய பந்தில் அப்படி என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.
Latest Cricket News Updates In Tamil: சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் போன்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்களும் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்துள்ளது எனலாம்.
இந்தியாவில் ஆண்டு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. இதற்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நேற்று நடந்த பிக்பாஷ் லீக் இறுதிப்போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் 23 வயது வீரர் மிட்செல் ஓவனின் அதிரடியான சதம் குறித்துதான் கிரிக்கெட் உலகமே தற்போது பேசி வருகிறது.
உலகம் முழுவதும் நடைபெறும் லீக் தொடர்கள்
ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், இங்கிலாந்து Vitality Blast டி20 தொடர் மற்றும் The Hundreds எனும் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் வீசப்படும் தொடர், தென்னாப்பிரிக்காவில் SA20 லீக், பாகிஸ்தானின் பிஎஸ்எல் லீக், மேற்கு இந்திய தீவுகளின் கரீபியன் கிரிக்கெட் லீக், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட், ஐக்கிய அரபு அமீரகத்தின் ILT20 தொடர் என பல்வேறு கிரிக்கெட் லீக் தொடர்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. இதில் சில தொடர்கள் ஆடவர்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் நடத்தப்படுகின்றன.
லீக் தொடர்கள் உருவாக்கும் வாய்ப்புகள்
இந்த கிரிக்கெட் லீக்கில் உலகம் முழுவதும் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பரவலாக பங்கேற்கின்றனர். சர்வதேச அணியில் இடம் கிடைக்காத வீரர்கள், சர்வதேச அரங்கில் ஓய்வுபெற்ற வீரர்கள், உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தும் இளம் வீரர்கள் அனைவரும் தேடி தேடி இந்த லீக் கிரிக்கெட்டுகளில் விளையாடுகின்றனர். இதனால், வீரர்களின் பொருளாதாரத்திலும் பிரச்னை இருக்காது.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் முகமது சிராஜ் விளையாடுவார்! வெளியான லேட்டஸ்ட் தகவல்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று, ஐபிஎல் லீக்கில் இருந்தும் ஓய்வுபெற்று தற்போது ஆர்சிபி அணியின் ஆலோசகராக உள்ள தினேஷ் கார்த்திக் கூட தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் SA20 லீக் தொடரில் விளையாடி வருவது இந்த லீக் கிரிக்கெட் வழங்கும் பரந்த அளவிலான வாய்ப்புகளை ஊகிக்கலாம். இந்த லீக் கிரிக்கெட் தொடர்கள்தான் பல வீரர்களுக்கும் பரிசார்த்த களமாகவும் இருக்கின்றன.
க்வேனா மபாகா வீசிய ஸ்லோயர் பால்
அந்த வகையில், SA20 லீக்கில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் - டர்பன் சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 18 வயது இளம் வீரரின் வாயை பிளக்கவைக்கும் பந்துவீச்சு முறையை பார்க்க முடிந்தது. அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது யாரென்று தெரிந்தாலும் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் பார்ல் ராயல்ஸ் பந்துவீசியது. அப்போது டர்பன் அணியின் ஹென்ரிச் கிளாசென் பேட்டிங் பிடித்துக்கொண்டிருக்க, 18 வயதான தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் க்வேனா மபாகா (Kwena Maphaka) 17வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் போட்ட ஸ்லோயர் பால் (102 kmph) டி20 போட்டிகளின் தற்போதைய அசூரனாக கருதப்படும் கிளாசெனை 13(14) ரன்களில் ஆட்டமிழக்க வைத்தது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு இனி இந்த பிரச்னை வராது... பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்!
இந்த பந்தில் என்ன சிறப்பு தெரியுமா?
வேகப்பந்துவீச்சாளர் ஸ்லோயர் பால் போடுவதில் என்ன ஆச்சர்யம் என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. ஆனால், மேலே கொடுத்திருக்கும் வீடியோ ஒருமுறை பார்த்துவிட்டு வந்து மேற்கொண்டு படித்தால் உங்களுக்கு நன்றாக புரியும். ஆம், அவர் Back Of The Hand டெலிவரியோ, knuckle பாலோ போடவில்லை என தெரிகிறதா... அவர் ஏறத்தாழ ஒரு லெக்-ஸ்பின்னர் போடும் கூக்ளி போன்ற பந்தை, ஓடி வந்து வீசியிருக்கிறார். இதுதான் கிளாசென் அந்த பந்தின் வேகத்தை கணிக்க முடியாமல் திணறவைத்திருக்கிறது.
ஒரே பந்தில் போட்டி தலைகீழானது
டி20 பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக திகழும் நிலையில், இதுபோன்ற ஆடுகளமும், சூழலும் பந்துவீச்சாளர்களுக்கு புதிய புதிய திறப்புகளை கொடுக்கிறது எனலாம். கடைசி கட்டத்தில் கிளாசென் ஆட்டமிழந்ததால் டர்பன் அணியால் 143 ரன்களையே அடிக்க முடிந்தது. இந்த இலக்கையே பார்ல் ராயல்ஸ் அணி கஷ்டப்பட்டு கடைசி ஓவரில்தான் அடித்து வெற்றி பெற்றது. ஒருவேளை கிளாசென் இருந்திருந்தால் டர்பன் அணி 20 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம். மபாகாவின் பந்து டர்பன் அணியின் வெற்றியையும் பறித்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
யார் இந்த க்வேனா மபாகா?
18 வயதான க்வேனா மபாகா சமீப காலமாகவே உலக கிரிக்கெட்டில் கவனம் பெற்று வருபவர் ஆவார். இப்போதே அவர் சர்வதேச அளவில் மூன்று பார்மட்களிலும் அறிமுகமாகிவிட்டார். 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இன்னும் அவர் செல்ல வேண்டிய இடம் ரொம்ப தூரம் இருக்கிறது என்றாலும், இவரது தனித்திறனை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
எந்த ஐபிஎல் அணியில் க்வேனா மபாகா?
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக (Mumbai Indians) 2 போட்டிகளில் விளையாடி ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியிருந்தார். இதனால், கடந்தாண்டு அடுத்தடுத்த போட்டிகளில் அவர் ஓரங்கட்டப்பட்டு, மெகா ஏலத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்டார்.
இவர் ரூ.75 லட்சத்தை அடிப்படையாக தொகையில் இருந்து ஏலம் விடப்பட்டார். ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணி இவருக்காக ஏலம் கேட்டது. ஆர்சிபி ரூ.1.40 கோடி வரை ஏலம் கேட்டது. கடைசியில் ரூ.1.50 கோடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை தூக்கியது. அப்படியிருக்க, ராகுல் டிராவிட்டின் கீழ் மபாகா இன்னும் மிளிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் க்வேனா மபாகா நிச்சயம் தவறவிட்டுள்ளனர் என்றே கூறலாம்.
மேலும் படிக்க | பும்ராவை பற்றி ஒரே நேரத்தில் வெளியான நல்ல செய்தி மற்றும் கெட்ட செய்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ