ICC World Cup: ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் சுருண்டது இலங்கை!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 20-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 20-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்து நாட்டில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 20-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது.
அணியில் அதிகப்பட்சமாக அரோண் பின்ச் 153(132) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ஸ்டீவன் ஸ்மித் 73(59), கெளன் மேக்ஸ் வெல் 46(25) ரன்கள் குவித்தனர்.
இலங்கை அணி தரப்பில் இருஷ் உடானா, தனசெழிய டி செல்வா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.
துவக்க வீரர்களாக களமிறங்கய கருணரத்னே 97(108), குசல் பெராறா 52(36) என பலமான ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணி ஆட்டத்தின் 45.5-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்சல் ஸ்டார்ச் 4 விக்கெட், ரிச்சட்சன் 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஆரோண் பின்ச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதேவேளையில் கார்டிப் மைதானத்தில் நடைப்பெற்று வரும் 21-வது லீக் போட்டியில் அப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த அப்கானிஸ்தான் அணி 34.1-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகின்றது.