18:45 21-06-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 233 ரன்கள் தேவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



14:46 21-06-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதயனையடுத்து இங்கிலாந்து அணி இன்னும் சற்று நேரத்தில் பந்து வீச உள்ளது.


 



 



லீட்ஸ்: இன்று 3 மணிக்கு தொடங்க உள்ள உலகக் கோப்பை 27வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. ஒருவேளை இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.


இந்தியாவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் 5 மற்றும் 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 9 புள்ளிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. அதேபோல ஈயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், அதிக ரன்-ரேட் பெற்றுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.


அதேவேளையில், திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி 5 போட்டிகளில் பங்கேற்று 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. மீதமுள்ள 2 போட்டிகளும் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மேலும் அணியின் ரன்-ரேட் மிகவும் குறைவாக உள்ளது. இலங்கை அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட நிலையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


இங்கிலாந்து: ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் குர்ரான், லியாம் டாசன், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.


இலங்கை: திமுத் கருணாரத்ன (கேப்டன்), தனஞ்சய டி சில்வா, நுவான் பிரதீப், அவிஷ்கா பெர்னாண்டோ, சுரங்கா லக்மல், லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ், குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), திசாரா பெரேரா, மிலிந்தா உதனா, ஜெஃப்ரி வாண்டர்சே.