2018-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் மொத்தம் 16 நாடுகள் கலந்துகொள்கிறது. இந்த தொடர் வரும் நவம்பர் 28-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாக்கி உலகக்கோப்பை ஆடவர் தொடரில் பங்கேற்கும் அணிகள் மொத்தம் நான்கு பிரிவுகளாக(ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு உள்ளன.


ஹாக்கி உலகக்கோப்பை 2018 அணிகள் பிரிவு:


ஏ பிரிவு: அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்
பி பிரிவு: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா
சி பிரிவு: பெல்ஜியம், இந்தியா, கனடா, தென் ஆப்பிரிக்கா
டி பிரிவு: நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாக்கிஸ்தான்


ஹாக்கி உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.


 



 


லீக் போட்டி முடிந்தவுடன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெரும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடும் பிளே ஆப் சுற்றுகளில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.


இறுதிப்போட்டி டிசம்பர் 16-ம் தேதி நடைபெரும்.