WTC Final: கைவிரித்த விராட், புஜாரா... சரணடைகிறதா இந்தியா - ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 318 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தனர்.
World Test Championship Final 2023 Day 2: பிளேயிங் லெவனில் அஸ்வின் இல்லாதது, ஆடுகளத்தில் புல் இருப்பதால் டாஸ் வென்று பந்துவீச முடிவெடுத்தது, பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை சொதப்பலாக செயல்படுத்தியது என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆரம்பித்த நேற்றைய முதல் நாளில் இருந்தே இந்திய அணியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின.
இன்றைய முதல் செஷனில் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என முனைப்பில் வந்த இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. செட்டிலாகியிருந்த ஹெட், ஸ்மித் ஆகியோர் தொடக்கத்தில் ரன்களை குவித்தாலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரீன், ஸ்டார்க் ஆகியோரும் முதல் செஷனிலேயே பெவிலியன் திரும்பினர்.
தொடர்ந்து, இரண்டாம் செஷனில் கேரி மட்டும் ரன்களை குவித்து வந்தார். அவரும் 48 ரன்களில் ஆட்டமிழக்க டெயிலெண்டர்களும் தங்களின் விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 121.3 ஓவர்களில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஷமி, ஷர்துல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேலும் படிக்க | SGFI: 66வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின! அசத்தும் மாணவர்கள்
இதையடுத்து, களம்கண்ட இந்திய அணி ஓப்பனர்கள் ரோகித் - கில் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர் என்று தான் கூறவேண்டும். விரைவாக ரன்களை குவித்து வந்த இந்த ஜோடியை கம்மின்ஸ் பிரித்தார். கம்மின்ஸ் பந்துவீச்சில் ரோகித் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து போலண்ட் பந்துவீச்சில் கில் கிளீன் போல்டானார். தேநீர் இடைவேளைக்கு முன் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்களை எடுத்திருந்தது.
விராட், புஜாரா மூன்றாவது செஷனை தொடங்கினர். சிறிது நேரத்திலேயே புஜாரா கிரீன் பந்துவீச்சில் போலாடாகி பெவிலியன் திரும்பினார். பெரிய இன்னிங்ஸை கட்டமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, ஸ்டார்க் பந்துவீச்சில் எட்ஜ்ஜாகி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார். இதனையடுத்து, ரஹானே - ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது எனலாம்.
ஜடேஜா தொடர்ந்து ரன்களை பெருக்கிவந்த நிலையில், ரஹானே மறுமுனையில் நிதானம் காட்டினார். ஜடேஜா 48 ரன்களை எடுத்திருந்தபோது, நாதன் லயான் பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தார். நன்கு செட்டிலாகியிருந்த அவர் அந்த நேரத்தில் ஆட்டமிழந்தது பெரும் பின்னடவாக பார்க்கப்பட்டது. ரஹானே - ஜடேஜா ஜோடி 71 ரன்களை எடுத்திருந்தது.
இதன்பின், ரஹானே உடன் கேஎஸ் பரத் ஜோடி சேர்ந்தார். இன்றைய நேர ஆட்டநேர முடிவில் இந்திய அணி (38 ஓவர்கள்) 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. ரஹானே 29 ரன்களுடனும், கேஎஸ் பரத் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், போலண்ட், லயான், கிரீன் உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் நிலவரம்
முதலாம் செஷன்: ஆஸ்திரேலியா - 24 ஓவர்கள் - 95 ரன்கள் - 4 விக்கெட்டுகள்
இரண்டாம் செஷன்: ஆஸ்திரேலியா - 12.1 ஓவர்கள் - 47 ரன்கள் - 3 விக்கெட்டுகள்
இந்தியா - 10 ஓவர்கள் - 37 ரன்கள் - 2 விக்கெட்டுகள்
மூன்றாம் செஷன்: இந்தியா - 28 ஓவர்கள் - 114 ரன்கள் - 3 விக்கெட்டுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ