இந்தியாவுடனான ஒப்பந்தங்களை தற்போதைக்கு நிறுத்தி வைக்க கோரி அனைத்து நாடுகளுக்கும் உலக மல்யுத்த பெடரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக CRPF வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதனால் இந்திய அரசு பாகிஸ்தானை தனிமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.


தாக்குதல் நடந்த சில நாட்களில் தலைநகர் புதுடெல்லியில் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஜப்பான் டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என்ற நிலை இருந்தது.


ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்களுக்கு இந்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்தியா உடனான குளோபல் நிகழ்ச்சிக்கான விவாதங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுத்தி வைத்துள்ளது.


இந்நிலையில் இந்திய மல்யுத்த சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள மற்ற நாட்டின் சங்கங்கள் அதனை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என உலக மல்யுத்தம் பெடரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது.


முன்னதாக தீவிரவாதத்துக்கு ஆதரவாகவும், ஊக்குவிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற BCCI-ன் வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் நட்பு வைப்பதும், உறவைப் பேணுவதும், துண்டிப்பதும் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை எனவும், இதுபோன்ற விஷயத்தில் தலையிட முடியாது என்று ICC இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.