வரலாறு படைத்த இந்திய வீராங்கனை; உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை அன்ஷு மாலிக் படைத்தார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அன்ஷு மாலிக் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தாலும், இந்தியாவின் இந்த தங்கமகள் அதிசயங்களையும் சாதனையும் செய்தார். உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 20 வயதான இந்திய வீராங்கனை அன்ஷு, நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடந்த மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்த அன்ஷு மாலிக், இறுதிப் போட்டியில் வென்றிருந்தால், இந்த சாதனையை அடைந்த முதல் பெண் மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றிருப்பார். முன்னதாக, இந்த போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மட்டுமே தங்கம் வென்று வெற்றி பெற்றுள்ளார். சுஷில் 2010 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு ஒரே தங்கத்தை பெற்று தந்துள்ளார். 57 கிலோவுக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஹெலன் லூசி மொரோலியை வீழ்த்தி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்றார்:
59 கிலோ பிரிவில், சரிதா உலக சாம்பியன்ஷிப்பில் ஸ்வீடனின் சாரா ஜோஹன்னா லிண்ட்பெர்க்கை 8-2 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்றார். சரிதா தனது ஆறாவது முயற்சியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெறும் முதல் பதக்கம் இதுவாகும். முன்னதாக, அவர் 23 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு முறையும், சீனியர் உலக சாம்பியன்ஷிப்பில் நான்கு முறையும் பங்கேற்றார். ஆனால் அவரால் அப்பொழுது பதக்கம் வெல்ல முடியவில்லை. இந்தமுறை பதக்கத்தை கைப்பற்றினார்.
ALSO READ | Wrestling: உலக மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக்
இந்திய வீராங்கனைகளின் சிறந்த செயல்திறன்:
உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணியின் சிறந்த செயல்திறன் இதுவாகும். 2012 இல், போகட் சகோதரிகள் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அல்கா தோமர் (2006), கீதா போகட் (2012), பபிதா போகட் (2012), பூஜா தண்டா (2018) மற்றும் வினேஷ் போகட் (2019) ஆகியோர் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR