’ஓய்வு பெற சொல்வதா?’ ராகுல் டிராவிட், கங்குலி மீது விருதிமான் சஹா காட்டம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற பரிசீலிக்குமாறு ராகுல்டிராவிட் கூறியதாக விருதிமான் சஹா காட்டமாக தெரிவித்துள்ளார்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து விருதிமான் சஹா மௌனம் கலைத்துள்ளார். அதில், இந்திய அணிக்கு இனிமேல் தேர்வு செய்யப்பட மாட்டேன் என அணி நிர்வாகம் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் ஒருவராக இருக்கும் வரை என்னால் இதனை சொல்ல முடியவில்லை எனத் தெரிவித்த அவர், இப்போது ஓபனாக பேசியுள்ளார்.
மேலும் படிக்க | இந்திய அணியில் பறிபோன வாய்ப்பு - ரஞ்சி டிராபியில் அதிரடி காட்டும் புஜாரா, ரஹானே
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் நடந்த உரையாடல்கள் குறித்து பேசிய விருதிமான் சஹா, அவர் தன்னை ஓய்வு குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல், பிசிசிஐ தலைவர் கங்குலியை அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, "பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தான் இருக்கும் வரை அணியில் இடத்தைப் பற்றி கவலைப் பட வேண்டாம் எனக் கூறினார்.
கடந்த நவம்பரில் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நான் ஆட்டமிழக்காமல் 61 ரன்களை எடுத்தபோது, தாதா (கங்குலி) வாட்ஸ்அப்பில் என்னை வாழ்த்தினார். அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. ஆனால், அதன்பிறகு ஏன் எல்லாம் வேகமாக மாறியது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம் இல்லை என தெரிந்தவுடன் இந்த ஆண்டு ரஞ்சி தொடரில் இருந்தும் விருதிமான சஹா விலகியுள்ளார். அவரது விலகல் குறித்து பேசிய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாக கூறினார்.
சேத்தன் சர்மாவும் தனக்கு இனிமேல் இந்திய அணியில் இடம் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகவும் விருதிமான் சஹா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR