இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் வாழ்க்கைக்கு இளம் வீரர் ஜெய்ஷ்வால் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார். ரோஹித் சர்மா இப்போது பார்மில் இல்லாமல் இருக்கிறார். இதே நிலை தொடர்ந்தாலோ அல்லது விரைவில் ரன்கள் அடிக்காமல் இருந்தாலோ இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த இடத்துக்கு நிச்சயம் ஜெய்ஷ்வால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். தவானுக்குப் பிறகு ஓப்பனிங் இறங்கக்கூடிய இடது கை பேட்ஸ்மேன்களை இந்திய அணி நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறது. அதற்கு இந்த ஐபிஎல் தொடரில் விடை கிடைத்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோகித் சர்மாவுக்கு சிக்கல்


ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆடிய ஜெய்ஷ்வால், அபாரமாக ஆடி ரன்களை குவித்து இந்திய அணியின் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்தார். இப்போது , ரோகித் சர்மாவின் இடத்துக்கு கண்வைத்துள்ளார்.  21 வயதான அவர் அற்புதமாக பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கிறார். எல்லாவிதமான ஷார்டுகளையும் சூப்பராக ஆடுவதால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு தேர்வு செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு ரோகித் சர்மாவுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.  


மேலும் படிக்க | Happy Birthday Dhoni: தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் தொட கூட முடியாது!


ஐபிஎல் தொடரில் கலக்கல்


ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிற்கி அபாரமாக ரன்களை குவித்த ஜெய்ஷ்வால் ஒரு சில போட்டிகளை தனியொருவராக போக்கை மாற்றிக் காட்டினார். தொடருக்குப் பிறகு அவர் பேசும்போது, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். அது தன்னுடைய மிகப்பெரிய கனவு எனக் கூறியிருந்தார். இப்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்யும் இந்திய அணியில்  டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று தொடர்களுக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


இந்திய அணியின் நம்பிக்கை


யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் 2023-ல் 14 போட்டிகளில் 82 பவுண்டரிகள் மற்றும் 26 சிக்ஸர்களுடன் 163.61 ஸ்ட்ரைக் ரேட்டில் 625 ரன்கள் எடுத்துள்ளார்.  மேலும், 1 சதம் மற்றும் 5 அரை சதங்கள் அடித்துள்ளார். ஐபிஎல் 2023ல் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறந்த ஸ்கோர் 124 ரன்கள் ஆகும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பதால் எதிரணிகளுக்கு மிகப்பெரிய எக்ஸ்-காரணியாக இருப்பார் என நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அவர் அமைதியானவர் இல்லை! தோனியின் மறுபக்கத்தை அம்பலப்படுத்திய முன்னாள் வீரர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ