ஒரு அணியில் 11 வீரர்களும் சச்சின், கோலியாக இருக்க முடியாது என இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரண் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியாதாக இந்திய கிரிக்கெட் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகளில் அதிகமான ரன்கள் எடுத்த நிலையிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 


உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கும் தருவாயில் இந்திய அணியின் தோல்வி பெரும் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மேலும் அணித்தலைவர் கோலியின் அணி மேலாண்மை குறித்தும் பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


இந்நிலையில், இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், "நாம் பொறுமைதான் காக்க வேண்டும். இந்திய அணி நன்றாகவே விளையாடி வருகின்றது. உலகக்கோப்பைக்காக சில, பல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், வெற்றியின் பாதையில் சில தோல்விகள் ஏற்படவே செய்யும். 


காரணம் ஒரு அணியில் 11 வீரர்களும் விராட் கோலிகளாகவோ, சச்சின் டெண்டுல்கராகவோ அல்லது டான் பிராட்மேனாகவோ இருக்க முடியாது.


சில போட்டிகளில் வெல்வோம், சில போட்டிகளில் தோல்விகள் தவிர்க்க முடியாதது, என தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் சுழற்பந்து வீச்சு பொருத்தவரையில் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் அணியின் முதுகெலும்பாய் இருந்து வருகின்றனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் அஷ்வின் ஆட்டத்தை குறிப்பிட்டு, அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதாக குறிப்பிடுகின்றனர், ஏன் அப்படி நினைக்க வேண்டும்?... இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்படுவதால் அஷ்வின் திறமையினை இந்திய அணி பட்டை தீட்டி வருகின்றது என எடுத்துக்கொள்வோமே என தெரிவித்துள்ளார். 


ஒருவேலை அணியில் அஷ்வின் இருந்திருந்தால் இந்தியா தோல்வி அடைந்திருக்காது என பலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சஹால் மற்றும் குல்தீப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது தான் உண்மை, மொஹாலி போட்டியில் கிடைத்த தோல்வியை வைத்து அவர்களை குறை கூறி விட முடியாது எனவும் முரளிதரண் தெரிவித்துள்ளார்.


ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். இந்திய அணி நன்றாக ஆடி வருகின்றனர், அவர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்றக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.