Olympic Games: பி.டி. உஷாவின் சாதனைகளை நினைவுக்கூறாமல் கடந்து செல்ல முடியவில்லை
தற்போது ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. ஒலிம்பிக் போட்டி குறித்து பேசினால், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் சாதனைகளை நினைக்காமல் கடந்து செல்ல முடியவில்லை.
புதுடெல்லி: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் (Tokyo Olympic) நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்திற்கு இன்னும் பதினைந்து நாட்களுக்குள் எஞ்சியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மீண்டும் 1.25 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் மேலும் மேலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இம்முறை ஏராளமான இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் தகுதி பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு கிட்டத்தட்ட 201 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வலுவான குழுவை அனுப்ப இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) முடிவு செய்துள்ளது. இந்திய குழுவில் 126 விளையாட்டு வீரர்கள் மற்றும் 75 அதிகாரிகள் உள்ளனர். ஜூலை 23 ஆம் தேதி தொடங்கும் இந்த நாற்பது நாள் நிகழ்வில், இந்தியக் குழுவில் 56 சதவீத ஆண்கள் மற்றும் 44 சதவீத பெண்கள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை இந்திய வீரர்கள் அதிகபட்ச பதக்கங்களை வென்று தங்களையும் நாட்டின் பெயரையும் உயர்த்த வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் விருப்பமாக உள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியாவின் வரலாறு புகழ்பெற்றதாக இல்லை. ஆனால் பறக்கும் சீக்கியர் மில்கா சிங் முதல் கோல்டன் கேர்ள் என அழைக்கப்படும் பிரபல ஓட்டப்பந்தய வீரர் பி.டி.உஷா வரை மக்கள் இன்னும் பெயரை மறக்கவில்லை. எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் தடகள போட்டிகளில், பி.டி. உஷா (P.T. Usha) அத்தகைய ஒரு வரலாற்றை படைத்தார். அவரின் சாதனைகள் இன்றும் பேசப்படுகிறது.
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்:
1979 ஆம் ஆண்டில் தடகள வாழ்க்கையைத் தொடங்கிய பி.டி.உஷா, திரும்பிப் பார்த்ததில்லை ஓடிக்கொண்டே இருந்தார். 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், பெண்கள் 400 மீ. தடை ஓட்டத்தில், அரையிறுதியில் முதலாவதாக வந்து பைனல் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில் ஒரு நொடி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், இந்த வரலாற்று சாதனையால், ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை உஷா பெற்றார்.
ALSO READ | டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கு இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
1980 இல் ஒலிம்பிக்கில் அறிமுகமானார்:
41 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிம்பிக்கில் அறிமுகமான பி.டி.உஷா, நான்காம் வகுப்பில் படிக்கும் போது தனது பள்ளியில் மூத்த சாம்பியனை தோற்கடித்தபோது தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது 16 வயதில், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற உஷா, அப்பொழுது பங்கேற்ற இந்திய குழுவின் இளைய வீரர் ஆவார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆதிக்கம்:
பி.டி.உஷா ஒலிம்பிக்கில் எந்த பதக்கத்தையும் வெல்ல முடியவில்லை. ஆனால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினார். 1982 இல் டெல்லியில் நடைபெற்ற 9வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒரு வருடம் கழித்து, குவைத்தில் நடைபெற்ற ஆசிய ட்ராக் அண்ட் ஃபீல்ட் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். 1983 மற்றும் 1989 க்கு இடையில், உஷா ஏடிஎஃப் விளையாட்டுகளில் 13 தங்கங்களை வென்றார்.
1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், அவர் 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதில் சிறப்பு என்னவென்றால், உஷா தங்கப்பதக்கம் வென்ற அனைத்து போட்டிகளிலும் அவர் ஒரு புதிய ஆசிய சாதனை படைத்தார். "ஆசிய தடகள ராணி" எனப் பட்டமும் அவருக்கு சூட்டப்பட்டது.
ALSO READ | Tokyo Olympics: இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்லும் பெருமையை பெறுவாரா பி.வி. சிந்து?
ஒரே நிகழ்வில் 6 பதக்கங்களை வென்றது:
1985 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய ட்ராக் அண்ட் ஃபீல்ட் போட்டிகளில், உஷா பெண்கள் பிரிவில் 100, 200, 400, 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் என வெண்கல பதக்கம் உட்பட ஐந்து போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். தொடர் ஓட்டம் மற்றும் தடை ஓட்டம் நிகழ்வில் ஒரு பெண் பதக்கம் வென்று புதிய உலக சாதனை அது.
தவறான தொடக்கம் தோல்விக்கு கரணம்:
அவர் அறிமுகமான ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டத் தவறிவிட்டார். ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்றார். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், பெண்கள் 400 மீ. தடை ஓட்டம் இறுதி போட்டியில் வெற்றியை தவறவிட்டார். இந்த தோல்வி கடந்த 41 ஆண்டுகளாக பி.டி.உஷா மற்றும் இந்திய மக்களை உலுக்கி வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கியவுடன், அந்த பழைய வலி மக்களின் மனதில் புதியதாகிறது. இந்த தோல்வியைப்பற்றி, பி.டி. உஷா கூறுகையில் பதக்கம் வெல்லாததற்குக் காரணம் பந்தயத்தின் தவறான தொடக்கம் தான் என்று கூறியிருந்தார்.
தற்போது ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. ஒலிம்பிக் போட்டி குறித்து பேசினால், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் சாதனைகளை நினைக்காமல் கடந்து செல்ல முடியவில்லை.
ALSO READ | COVID Olympics: பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள்; எமர்ஜென்சியை அறிவித்தது ஜப்பான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR