IPL 2020 Updates: கடந்த வார இறுதியில் ஐபிஎல் 2020 தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா (Suresh Raina) வெளியேறியது அவரது தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறப்பட்டாலும், தோனிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் காரணம் என செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது மாமா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதை அடுத்து,  அவரது சொந்தக் காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

33 வயதான அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா, கிரிக்பஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் (Chennai Super Kings) இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிராகரிக்கிறார். மேலும் அவரைப் பற்றி என் சீனிவாசன் கூறிய கருத்துக்களை "தந்தை தனது மகனை திட்டுவது" போன்றது என்று குறிப்பிட்டு உள்ளார். 


ALSO READ |  ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறதா? இனி CSK அணிக்காக ஆட மாட்டார் சின்ன தல சுரேஷ் ரெய்னா


மாமா சம்பந்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை அடுத்து, வீடு திரும்பியதாகவும் ரெய்னா கூறினார். மேலும் எப்ப வேண்டுமானாலும் ஐபிஎல் முகாமுக்குத் திரும்புவார் என்று சைகை காட்டினார். 


மேலும் பிரத்யேக பேட்டியில் அவர் கூறிய சில முக்கிய விவரங்கள்: 


இது ஒரு தனிப்பட்ட முடிவு, நான் எனது குடும்பத்திற்காக திரும்பி வர வேண்டியிருந்தது. சி.எஸ்.கே எனது குடும்பம் மற்றும் மாஹி பாய் (MS Dhoni) ) எனக்கு மிகவும் முக்கியமானது. இது ஒரு கடினமான முடிவு. சி.எஸ்.கே மற்றும் எனக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. யாரும் 12.5 கோடி ரூபாயைத் திடமான காரணமின்றி விலகிச் செல்ல மாட்டார்கள். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் அவர்களுக்காக விளையாடுவதை எதிர்பார்க்கிறேன்.


ALSO READ |  IPL 2020-லில் இருந்து வெளியேறியது ஏன்? மௌனம் களைத்த SURESH RAINA


என் சீனிவாசன் (N. Srinivasan) எனக்கு ஒரு தந்தை உருவம் போன்றவர், அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார், என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கிறார். அவர் என்னை தனது இளைய மகனைப் போலவே நடத்துகிறார், ஒரு தந்தை தன் மகனைத் திட்டலாம். அவர் அந்தக் கருத்துக்களைக் கூறும்போது நான் வெளியேறுவதற்கான உண்மையான காரணங்கள் அவருக்குத் தெரியாது. இப்போது அவருக்கு உண்மைக்குறித்து தெரிந்துக்கொண்டார். 


இங்கே தனிமைப்படுத்தப்பட்டபோதும் நான் கிரிக்கெட் பயிற்சி பெற்றிருக்கிறேன். அதேபோல UAE-ல் உள்ள முகாமில் என்னை மீண்டும் நீங்கள் காணலாம்