புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இந்நாட்களில் தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார். சையத் முஷ்டாக் அலி டிராபியில், யுவராஜ் பஞ்சாபிற்கான 30 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் BCCI அவரை விளையாட அனுமதிக்கவில்லை. இதைப் பற்றி சில நாட்கள் வெகுவாக பேசப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது யுவ்ராஜ் மீண்டும் செய்திகளில் வந்துள்ளார். ஆனால் இந்த முறை அவரது பெயர் செய்திகளில் அடிபடுவதற்கு காரணம் விளையாட்டல்ல, அவரது ஸ்போர்ட்ஸ் கார். ஆம்!! அவர் வாங்கியுள்ள ஸ்போர்ட்ஸ் கார் பற்றிதான் அவரது ரசிகர்களும் இன்னும் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


யுவராஜ் மினி கூப்பரை வாங்கினார்


யுவராஜ் சிங் (Yuvraj Singh) கார்கள் மீது காதல் கொண்டவர். அவரிடம் பல சிறந்த, தனித்துவமான, விலை உயர்த கார்களின் தொகுப்பு உள்ளது. இப்போது மற்றொரு மிகப்பெரிய காரை தனது கார் தொகுப்பில் யுவ்ராஜ் சேர்த்துள்ளார். சமீபத்தில், யுவராஜ் சிங் பிரிட்டிஷ் (British) நிறுவனமான மினி கூப்பரின் கன்ட்ரீமேன் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார்.


இந்த காரின் விலை 42.4 லட்சம் ரூபாயாகும். இந்த காரின் வேகம் அதன் மிகப்பெரிய பேசப்படும் அம்சமாக உள்ளது. இந்த கார் வெறும் 7.5 வினாடிகளில், மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறன் படைத்தது.


மினி கூப்பரின் கன்ட்ரீமேன் காரின் இரண்டு வகைகள் சந்தையில் உள்ளன. ஒன்றின் விலை 38.5 லட்சம் ரூபாய். இது 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டது. இந்த எஞ்சின் 1,350rpm-ல் 192ps பவரையும் 230nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. ரூ .42.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேரியண்ட்களின் கார் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.


ALSO READ: Australiaவில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 இந்திய வீரர்களிடம் BCCI விசாரணை


இந்த இரண்டு வகைகளும் 7.5 வினாடிகளில், மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகமெடுக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.


யுவராஜின் மிகப்பெரிய கார் கலெக்ஷன்


யுவராஜ் சிங் கார்கள் (Cars) மீது அதீத காதல் கொண்டவர். அவரிடம் பல சிறந்த கார்கள் உள்ளன. அவரது கலெக்ஷனில் BMW M 5 E60, BMW X60M, Audi Q5, Lamborghini Murcielago மற்றும் Bentley Continental GT போன்ற உயர் ரக கார்கள் உள்ளன.


கிரிக்கெட்டைப் (Cricket) பொறுத்தவரை அதிரடி ஆட்டத்திற்கு புகழ்பெற்றவர் யுவ்ராஜ் சிங். அவர் களத்தில் இறங்கினால் எதிர் அணியினர் கலங்கிப் போவார்கள் என்பது உண்மைதான். வேகம் என்பது அவரது இயல்பாக இருந்துள்ளது. விளையாட்டானாலும் சரி, அவர் வாங்கும் கார்களானாலும் சரி, அவரது வேகமும், ஸ்டைலும் அவற்றில் பிரதிபலிக்காமல் இருப்பதில்லை.


ALSO READ: ‘நடராஜனின் அற்புத கதை உத்வேகம் அளிக்கிறது’: T Natarajan-ஐ பாராட்டிய முன்னாள் கிரிக்கெட்டர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR