யுவராஜ் சிங்குக்கு நேர்ந்த கதிதான் சஞ்சு சாம்சனுக்கு.. தந்தையால் வந்த வினை..!
Sanju Samson | இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு நேர்ந்த கதிபோல் சஞ்சு சாம்சனும் ஓரங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
Sanju Samson, Yuvraj Singh : இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) அவரது தந்தையால் கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அவர், அந்த அணிக்கு எதிராக சதமடித்து அசத்தினார். அதனால், டி20 பார்மேட்டில் இந்திய அணியில் தனக்கான இடத்தை சஞ்சு சாம்சன் உறுதி செய்துவிட்டார் என எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென அவரது தந்தை கொடுத்த பேட்டி ஒன்று சர்ச்சையாகியுள்ளது. அந்த பேட்டியில், தோனி, விராட், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காமல், அவரின் வாழ்க்கையை ஒரு பத்தாண்டுகள் வீண்டித்துவிட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அப்போது எதிர்கொண்ட கஷ்டத்தை இப்போது களத்தில் அதிரடி ஆட்டமாக சஞ்சு சாம்சன் காண்பித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
"ரோகித், விராட், தோனி மற்றும் டிராவிட் என நான்கு பேரும் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையை 10 ஆண்டுகள் வீணடித்துவிட்டார்கள். அவருக்கு சரியாக வாய்ப்பே கொடுக்கவில்லை. வங்கதேசம் அணிக்கு எதிரான சதமடித்த சஞ்சு இப்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் சதமடித்திருக்கிறார். ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சொத்த பவுலர்களுக்கு எதிராக சஞ்சு சதமடித்ததாக விமர்சித்தார். இப்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சஞ்சு சதமடித்திருக்கிறாரே? இப்போது அவர் என்ன சொல்லப்போகிறார். அவருடைய பேட்டி எனக்கு நிறைய வலியை கொடுத்திருக்கிறது. இத்தனைக்கும் அவர் ஒரு முன்னாள் வீரர். அவர் வங்கதேச அணிக்கு எதிராக வெறும் 26 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அதனால் பொறுப்போடு பேச வேண்டும்" என சஞ்சு சாம்சன் தந்தை விஸ்வநாத் கடுமையாக பேட்டியில் பேசியுள்ளார்.
மேலும், சூர்யகுமார், கவுதம் கம்பீர் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து வருவதாகவும், அதற்கு அவர்களுக்கு நன்றி என்றும் விஸ்வநாத் தெரிவித்தார். பல கடினமான தருணங்களை எதிர்கொண்டிருப்பதால், அப்போது பட்ட வலி எல்லாம் தான் சஞ்சு இப்போது ஆட்டத்தில் காண்பித்து கொண்டிருப்பதாகவும் அவர் பெருமையோடு தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருடைய இந்த பேட்டி சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை எதிராக செல்ல வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இவரைப் போலவே, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங்கின் தந்தை அடிக்கடி கேப்டன் தோனியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார். அதனால் 2011 உலகக்கோப்பை முடிந்ததும் யுவ்ராஜ் சிங்கிற்கு இந்திய அணியில் தோனி வாய்ப்பே கொடுக்கவில்லை. முழுவதுமாக அவரை ஒரங்கட்டிவிட்டு வேறு பிளேயர்களுக்கு மட்டுமே சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்தார்.
யுவ்ராஜ் சிங் இடத்தில் சுரேஷ் ரெய்னா ஆட வைத்தார் தோனி. இப்போது சஞ்சு சாமசனின் தந்தையும் இந்திய அணியில் இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விமர்சித்திருப்பதால் அடுத்தடுத்த தொடர்களில் இந்திய அணி தேர்வில் சஞ்சு சாம்சன் வாய்ப்புகளை பறிக்க காரணமாக இருக்கப்போகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் விளையாட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். அதற்குள் ரோகித் சர்மாவுக்கு எதிராக சஞ்சு சாம்சன் தந்தையின் பேட்டி கொடுத்திருக்கிறார். அதனால், ரோகித் எப்படி சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுப்பார்?.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ