ஜாகீர் கானுடன் நடிகை சகரிகா கட்ஜ்க்கு நிச்சயதார்த்தம்

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக வைத்து கடந்த 2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான `சக் தே இந்தியா' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார் சகரிகா கட்ஜ். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த அவர், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கட்ஜீக்கும், பிரபல கிரிக்கெட் வீரரான ஜாகீர் கானுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இருவருமே சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். மேலும் பொது இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவும் வலம் வருகின்றனர்.
இந்நிலையில் ஜாகீர் கான் - சகரிகா கட்ஜ் திருமண நிச்சதார்த்தம் நேற்று நடைபெற்றதாக இருவரும் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.