ஸ்டார்பக்ஸின் தலைமை செயலதிகாரி ஹாவர்ட் ஷெல்ஸ் ராஜினாமா!
ஸ்டார்பக்ஸின் தலைமை செயலதிகாரி ஹாவர்ட் ஷெல்ஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்!
ஸ்டார்பக்ஸின் தலைமை செயலதிகாரி ஹாவர்ட் ஷெல்ஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்!
அமெரிக்க பிரபல காஃபி ஷாப் நிறுவனமான 'ஸ்டார்பக்ஸின்' (Starbucks), தலைமை செயலதிகாரி ஹாவர்ட் ஷெல்ஸ் (Howard Schultz) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகின் தலைசிறந்த காஃபி ஹாப் நிறுவனங்களில் ஸ்டார்பக்ஸ் முதன்மையானதாக திகழ்கிறது. இந்நிறுவனம் இந்தளவு முன்னேற்றம் அடைந்ததற்கு அதன் தலைமை செயலதிகாரி ஷெல்ஸின் புத்தாக்க சிந்தனைகளே காரணம் என வர்த்தக உலகில் நம்பப்பட்டது.
இந்நிலையில், பொது வாழ்வில் ஈடுபடவுள்ளதால் தமது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமை செயலதிகாரி ஷெல்ஸ் திடீரென அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசிய போது....!
வர்த்தக உலகிற்கான அவரது பங்களிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், இனி வரும் காலங்களில் பொது வாழ்வில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் பிரதான கட்சியின் வேட்பாளராக இவர் களமிறங்கும் வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது, 64 வயதாகும் ஷெல்ஸின் தலைமையில், கடந்தாண்டில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது!