தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22 ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 13 பேர் பலியாயினர். இதையடுத்து, தூத்துக்குடி இயல்பு நிலை திரும்பியதால், இன்றுடன் 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களை அமைச்சர்கள் மற்றும் டி.ஜி.பி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, இந்த போராட்டத்தில் வன்முறையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில்,  தற்போது அந்த காட்சிகள் வெளியிட்டப்பட்டுள்ளனர். 


அந்த வீடியோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாகனங்கள் தாக்கப்படுகின்றன. சில இடங்களில் காட்சிகள் ஒட்டி வெட்டப்பட்டது போல உள்ளது. துப்பாக்கி சூடு நடந்து 4 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.


போலீஸ் தரப்பு துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்துள்ளது. பொதுமக்கள் தரப்பு காட்சிகளை மட்டுமே காவல்துறை வெளியிட்டுள்ளது, மீதம் இருக்கும் காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது.