இன்றைய கால கட்டத்தில், இரவில் மனிதர்கள் உறங்குவதற்கான நேரம் குறைவாக தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இரவில் பணிபுரிபவர்களுக்கு இது கடும் சவாலாகவே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இது தொடர்பாக சீனா ஆய்வு வெயிட்டுள்ள அறிக்கையில்....!


நீண்ட நாள்களுக்கு இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது.


இரவுப் பணியின்போது பெண்கள் தவறான உணவுப் பழக்கமும் சேர்ந்துகொள்கின்றனர் இது அவர்களுக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. 


இந்த அணுகுமுறையானது மிக எளிதில் பெண்களுக்கு புற்றுநோய்யை உண்டு பண்ணும் என்று தெரிவித்துள்ளது.


சீனாவின் செங்டூ நகரத்திலிருக்கிறது சிச்சுவான் பல்கலைக்கழகம் (Sichuan University). இதன் மேற்கு சீன மருத்துவ மையத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 39,09,152 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கியமாக, ஆய்வில்11 வகையான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 


அதில், 41 சதவிகிதம் பேருக்கு சருமப் புற்றுநோய், 32 சதவிகிதம் பேருக்கு மார்பகப் புற்றுநோய், 18 சதவிகிதம் பேருக்கு இரைப்பைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 


குறிப்பாக, இரவு பணிபுரிபவர்களுக்கு ஒவ்வோர் ஐந்து வருடத்துக்கும் புற்றுநோய் வரும் வாய்ப்பு 3.3 சதவிகிதம் அதிகரிக்கிறது என்பதும் தெரியவந்திருக்கிறது.