நீண்ட காலம் வாழ நெடுந்தூர நடைப்பயிற்சி தேவை!
நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால் வேகமான நடைப்பயிற்சி செய்தால் போதும் என்பது உங்களுக்கு தெரியுமா?
நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால் வேகமான நடைப்பயிற்சி செய்தால் போதும் என்பது உங்களுக்கு தெரியுமா?
தினமும் நாம் வழக்கமாக செய்யும் நடைப்பயிற்சியின் வேகத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் நம் வாழ்வின் ஆயுலை நீட்ட முடியும் என ஒரு ஆய்வின் தகவல் தெரிவிக்கின்றது.
சிட்னி பல்கலைக் கழகத்தின் தலைமையிலான ஆராய்ச்சி, சராசரியான வேகத்தில் செய்யும் நடைபயணமானது, மெதுவான வேகத்தில் செய்யும் நடைபயணத்துடன் 20% வீதம் இறப்பு விகிதத்தினை குறைக்கிறது என தெரிவிக்கின்றது.
இயல்புநிலையினை விட வேகமான நிலையில் நடைபயிற்சி செய்யும் போது சராசரியாக 24% இறப்பு விகிதத்தினை குறைக்கின்றது என இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது. காரணம் அதிக வேக நடைப்பயிற்சி ஆனது இதய அழுத்தங்களை குறைக்கின்றது., இதனால் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளை இந்த வகை நடைப்பயிற்சி குறைக்கும் என தெரிகிறது.
இளம் வயதினர் மட்டும் அல்லாமல் வயது முதிற்சி அடைந்தவர்கள் கூட இந்த பயிற்சியினை செய்து வந்தால் கிட்ட தட்ட 57% உடலில் எற்படும் எதிர்மறைகளை குறைக்கலாம் என ஆய்வு தெரிவிக்கின்றது.
நடைப்பயிற்சியின் வேகமானது மணிக்கு 5 முதல் 7 கிமீ தொலைவிகை கடக்கும் வேகத்தில் இருந்தால் நல்லது. தினமும் தனியாக உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக நாம் இயல்பாக செய்யும் நடைப்பயிற்சியினை சற்றே வேகமாக நடத்து உடற்பயிற்சியால் பெரும் பயனை பெறலாம்.
இயல்பாக நாம் நடைப்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து கழிவு நீர்கள் வேர்வையாக வெளியாகிறது. அதே வேலையில் மூச்சு திணறல் போன்ற பிரச்சணைகளை சமாளிக்கும் வகையில் மனித உடலுக்கு தேவையான உந்துசக்தியினை இப்பயிற்சி கொடுக்கின்றது என இந்த ஆய்வின் தலைவர் மற்றும் சிட்னி பல்கலை கழக பேராசிரியர் ஸ்டமாஸ்டிக் தெரிவித்துள்ளார்.