ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த 1981-ஆண்டு மே-13 அன்று பிறந்தார். இதையடுத்து, டேனியல் வெபர் என்பவரரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர், பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னிலியோனை 'வடகறி' என்னும் திரைப்படம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தது.


இவர் தற்போது, தமிழ் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் பாகத்தை மே- 18 ம் தேதி வெளியிடுவதாக தனது பிறந்தநாளன்று அவர் தெரிவித்திருந்தார். 


அதன்படி, வீரமா தேவி படத்தின் முதல் பாகத்தை இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.! தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகின்றது. அதையடுத்து, ஒரு வீடியோ பதிவு ஒன்றையும் அவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.